Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சேரிவாசிகள் எண்ணிக்கை 9.30 கோடியாக உயரும்

Print PDF

தினகரன் 06.09.2010

சேரிவாசிகள் எண்ணிக்கை 9.30 கோடியாக உயரும்

புதுடில்லி, செப். 6: இந்தியாவில் நகர்ப்புற குடிசைகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கை 2011ல் 9 கோடியே 30 லட்சமாக அதிகரிக்கும் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நாட்டில் 2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதில் நகர்ப்புற குடிசைவாழ் மக்கள் பற்றிய கணக்கெடுப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்பட்டு வருகிறது. ராஜீவ் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் குடிசைகள் இல்லா இந்தியா உருவாக்க மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நாட்டின் நகர்ப்புற குடிசைகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கை 2011ல் ஒன்பது கோடியே 30 லட்சமாக உயரும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இந்த எண்ணிக்கை ஒரு கோடியே 80 லட்சமாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய திட்டக் கமிஷனுக்கான தலைமை ஆலோசகரும், புள்ளியல் துறை முன்னாள் தலைவருமான பிரணாப் சென் கூறுகையில், ‘கடந்த 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நகர்ப்புற குடிசைவாழ் மக்கள் தொகை 2011ல் ஏழு கோடியே 60 லட்சமாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய நவீன கணக்கெடுப்பின்படி ஒன்பது கோடியே 30 லட்சமாக அதிகரிக்கும் என்று தெரிய வந்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டில் ஐந்து கோடியே 20 லட்சமாக இருந்ததுஎன்று தெரிவித்துள்ளார்.

புதிய கணக்கெடுப்பின்படி 2011ம் ஆண்டு நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ஒரு கோடியே 81 லட்சம், டெல்லியில் 31.63 லட்சம், உத்தரப்பிரதேசத்தில் 1.87 கோடி, தமிழகத்தில் 86.44 லட்சம், மேற்குவங்கத்தில் 85.46 லட்சம், ஆந்திராவில் 81.88 லட்சம் பேரும் வசிப்பார்கள் என்று தெரிய வந்துள்ளது.

குடிசைப்பகுதி வாழ் மக்கள் அதிகரிப்பை அமோதித்து மத்திய குடிசைவாழ் மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத்துறை அமைச்சர் குமாரி செல்ஜா கூறுகையில், ‘திடீர் நகர்ப்புற வளர்ச்சியால் குடிசை வாழ் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மத்திய அரசின் குடிசைப்பகுதி வளர்ச்சி மற்றும் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் இந்த எண்ணிக்கை குறையும். ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இன்னும் ஐந்து ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத இந்தியா உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மாநில அரசுகள் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே இதை அடைய முடியும்என்றார்.

இதற்கு முந்தைய கணக்கெடுப்பின்படி கொத்தாக 60 குடிசைவாழ் வீடுகளுக்கு மேற்கூரை இல்லை அல்லது காங்கிரீட் கூரை இல்லை, குடிநீர் இல்லை, கழிவறை, கழிவுநீர் வசதியில்லை என்று இருந்தது. இது தற்போது 20 முதல் 25 வீடுகளுக்கு என்று குறைந்துள்ளது.