Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகர்புற நலிவடைந்த பிரிவினருக்கு வட்டி மானியத்தில் வீடு கட்ட கடன்

Print PDF

தினமலர் 23.12.2009

நகர்புற நலிவடைந்த பிரிவினருக்கு வட்டி மானியத்தில் வீடு கட்ட கடன்

விழுப்புரம்:நகர்புறம் மற்றும் பேரூ ராட்சி பகுதிகளைச் சேர்ந்த நலிவடைந்த பிரிவினருக்கு அரசு சார்பில் வட்டி மானியத்தில் வீடு கட்ட வங்கி கடன் வழங் கப்படுகிறது.மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி பகுதியில் குறைந்த வருவாய் பெற்று பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு சொந்தமாக வீடு கட்டிக் கொள்ள வங் கிகள் மூலம் வட்டி மானியத்தில் கடன் வழங்கப்படுகின்றன.நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் மாத வருமானம் 3,300 ரூபாய் வரையுள்ளவர்களுக்கு மானிய வட்டியில் அதிக பட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. மாத வருமானம் 3,301 முதல் 7,300 ரூபாய் வரை உள்ளவர்களுக்கு மானிய வட்டியில் அதிக பட்சமாக ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கடன் வழங் கப்படுகிறது.

இதில் மத்திய அரசின் மானியம் அதிகபடியாக ஒரு லட்சம் ரூபாய்க்கு 5 சதவீதமும், அதற்கு மேல் உள்ள தொகைக்கு வங்கி நிர்ணயம் செய்யும் தொகை யும் செலுத்த வேண்டும்.விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி நகரப் பகுதிகள், 15 பேரூராட் சிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சொந்தமாக வீட்டுமனைப் பட்டா இருந்தால் செயற் பொறியாளர் மற்றும் நிர் வாக அதிகாரி, தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம், விழுப்புரம் என்ற முகவரியிலும், 04146-249606 என்ற தொலை பேசியிலும் தொடர்பு கொள்ளலாம் என கலெக் டர் தெரிவித்துள்ளார்.