Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிசை அபிவிருத்தி திட்டத்தில் 350 வீடுகள் கட்ட ரூ.3.73கோடி ஒதுக்கீடு

Print PDF

தினகரன் 29.12.2009

குடிசை அபிவிருத்தி திட்டத்தில் 350 வீடுகள் கட்ட ரூ.3.73கோடி ஒதுக்கீடு

சிவகங்கை : சிவகங்கை, காரைக்குடியில் குடிசை அபிவிருத்தி திட்டத்தில் 350 வீடுகள் கட்ட ரூ.3.73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை நகராட்சி: 2008&09ம் ஆண்டில் இயக்குதல் மற்றும் பராமரித்தல் உள்ள இடைவெளியை நிரப்பும் திட்டத்தின் கீழ் சிவகங்கை நகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டுவதற்காக ரூ.75லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2007&08ம் ஆண்டில் பின்தங்கிய பகுதி வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் ரூ.70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.54.02 லட்சம் மான்யமாகவும், ரூ.15.98 லட்சம் நகராட்சி வருவாய் நிதியிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 3பணிகள் எடுக்கப்பட்டு ஒரு பணி முடிக்கப்பட்டுள்ளது. மற்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. 2008&09ம் ஆண்டிற்கு ரூ.60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.54.02 லட்சம் மான்யமாகவும், ரூ.5.98 லட்சம் நகராட்சி வருவாய் நிதியிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 2பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

2008&09ம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த குடிசைப்பகுதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 5 குடிசைப்பகுதிகளில் 155 பேருக்கு வீடுகள் கட்டி கொள்ளும் பணிக்கு ரூ.165.85 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 22வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மற்ற கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன. 5 குடிசை பகுதிகளிலும் அடிப்படை வசதி மேற்கொள்ளும் பணிக்கு ரூ.124 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் 17பணிகள் தேர்வு செய்யப்பட்டு ஒரு பணி முடிவடைந்துள்ளது. மற்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

காரைக்குடி நகராட்சி:

காரைக்குடி நகராட்சியில் 2006&07ல் பகுதி 2 திட்டத்தில் ரூ.56 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ரூ.4.76 லட்சத்தில் 2006&07ல் 1071 நாய்களுக்கும், 2008&09ல் 113 நாய்களுக்கும் கருத்தடை செய்யப்பட்டுள்ளன. ரூ.13 லட்சத்தில் நவீன இறைச்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.80 லட்சத்தில் பூங்கா அபிவிருத்தி பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பின்தங்கிய பகுதிகளுக்கான வளர்ச்சிநிதி திட்டத்தின்கீழ் ரூ.116.32 லட்சத்தில் 3 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2008&09ல் ஒருங்கிணைந்த தேசிய குடிசை அபிவிருத்தி திட்டத்தில் 5 குடிசை பகுதிகளில் 195 வீடுகள் கட்ட ரூ.208.05 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதேபோல் ஒருங்கிணைந்த தேசிய குடிசை அபிவிருத்தி திட்டத்தில் 5 குடிசை பகுதிகளில் அடிப்படை வசதி மேற்கொள்ள ரூ.206.35 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Tuesday, 29 December 2009 11:48