Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிசை மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.19.96 கோடி வீடு கட்டும் பணிகளை அமைச்சர் நேரில் ஆய்வு

Print PDF

தினமலர் 05.01.2010

குடிசை மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.19.96 கோடி வீடு கட்டும் பணிகளை அமைச்சர் நேரில் ஆய்வு

திருச்சி: திருச்சி மாநகராட்சிப் பகுதியில் நடக்கும் ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் குடிசைப்பகுதிகளில் 19.96 கோடி ரூபாயில் ஆயிரத்து 208 வீடுகள் கட்டும் பணியை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்சி மாநகராட்சியின் நான்கு கோட்டங்களிலும், ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 19.96 கோடி ரூபாயில், தேர்வு செய்யப்பட்ட 36 அங்கீகரிக்கப்பட்ட குடிசைப்பகுதிகளில் மொத்தம் ஆயிரத்து 208 வீடுகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. ஆயிரத்து 147 குடிசை வீடுகளுக்கு பதிலாக ஆர்.சி.சி., கூரையிலான வீடுகளும், 61 கூரையிலான வீடுகளில் அபிவிருத்திப் பணிகளும் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் சாலை, மழைநீர் வடிகால், குடிநீர் வசதி மற்றும் மின்விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடு ஒன்றுக்கு மத்திய அரசு மானியம் 64 ஆயிரம் ரூபாய், மாநில அரசு மானியம் எட்டாயிரம் ரூபாய், மாநகராட்சி பொதுநிதி 28 ஆயிரம் ரூபாய் மற்றும் பயனாளிகள் பங்களிப்பு 30 ஆயிரம் ரூபாய் என்ற நிதியாதாரத்துடன் தலா ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஆயிரத்து 147 வீடுகள் 14.91 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படுகிறது.

பயனாளிகள் பங்குத்தொகையான 30 ஆயிரம் ரூபாயில் வங்கிக்கடனாக 20 ஆயிரம் ரூபாய் நான்கு சதவீத வட்டி, 90 மாத சுலப தவணைகளில் திருப்பிச் செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தி செய்யும் வீடு ஒன்றுக்கு மத்திய அரசு மானியம் 32 ஆயிரம் ரூபாய், மாநில அரசு மானியம் நான்காயிரம் ரூபாய் மற்றும் பயனாளிகள் பங்களிப்பு நான்காயிரம் ரூபாய் என்ற நிதியாதாரத்துடன் தலா 40 ஆயிரம் மதிப்பில் 61 வீடுகளில் 24.4 லட்சம் ரூபாய் மதிப்பில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதுதவிர குடிசைப் பகுதிகளில் தார், சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைத்தல், மின்விளக்கு அமைத்தல், மழைநீர் வடிகால் கட்டுதல், சமுதாயக்கூடம், மகப்பேறு மருத்துவமனை, அங்கன்வாடி, வீட்டு குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் 4.8 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் செய்யப்படுகிறது. வீடுகள் கட்டுமானம், அபிவிருத்தி 15.155 கோடி ரூபாய், அடிப்படை வசதிகள் 4.8 கோடி உட்பட மொத்தம் 19.96 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் நேரு, அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது, கலெக்டர் சவுண்டையா, மேயர் சுஜாதா, ஆணையர் பால்சாமி, எம்.எல்.., சேகரன், துணை மேயர் அன்பழகன், நகரப்பொறியளர் ராஜாமுகமது உட்பட பலர் உடனிருந்தனர்.

Last Updated on Tuesday, 05 January 2010 06:55