Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிசை மேம்பாட்டுத் திட்ட விழிப்புணர்வு முகாம்

Print PDF

தினமணி 26.03.2010

குடிசை மேம்பாட்டுத் திட்ட விழிப்புணர்வு முகாம்

பெரம்பலூர்
, மார்ச் 25: பெரம்பலூரில் நகராட்சி சார்பில், ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பயன்பெறுபவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமில், இந்தத் திட்டத்தில் விரைவாக வீடுகளைக் கட்டி முடித்த பயனாளிகளுக்கு பரிசுகள் வழங்கி நகராட்சித் தலைவர் எம்.என். ராஜா பேசியது:

தஞ்சை மண்டலத்தில் உள்ள நகராட்சிகளில் அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்துவதில் பெரம்பலூர் நகராட்சி முன்னிலை வகிக்கிறது. ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் நகராட்சிப் பகுதியில் ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் 580 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ள பயனாளிகளின் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, புதைச் சாக்கடை இணைப்பு, வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. மேலும், அவர்களுக்கு குறைந்த வட்டியில் ரூ.25 ஆயிரம் கடன் வசதி வழங்கப்படும் என்றார் அவர். முகாமில், தஞ்சை மண்டல திட்ட அலுவலர் சுவாமிநாதன், பெரம்பலூர் நகராட்சித் துணைத் தலைவர் கி. முகுந்தன், தஞ்சை மண்டல உதவிப் பொறியாளர் கவிதா, நகராட்சி உறுப்பினர்கள் ஆர்.டி. ராமச்சந்திரன், ஜெயக்குமார், கே.ஜி. மாரிக்கண்ணன், தாண்டாயி, கண்ணகி, ஈஸ்வரி, பொற்கொடி ஞானசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, நகராட்சி ஆணையர் அ. அசோக்குமார் வரவேற்றார். நிறைவில், நகராட்சிப் பொறியாளர் மணிமாறன் நன்றி கூறினார்.

Last Updated on Friday, 26 March 2010 06:47