Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கான்கிரீட் வீடு திட்டம்: 66 பயனாளிகளுக்கு ரூ. 18.71 லட்சம் நிதியுதவி

Print PDF

தினமணி 08.04.2010

கான்கிரீட் வீடு திட்டம்: 66 பயனாளிகளுக்கு ரூ. 18.71 லட்சம் நிதியுதவி

கோவை, ஏப். 7: ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் திட்டத்தின்கீழ் 66 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 71 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

÷ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின்கீழ் நகர்ப்புற ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் திட்டம் கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

÷மாநகாட்சியின் மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 58}வது வார்டில் உள்ள பயனாளிகளுக்கு நிதியுதவி அளிக்கும் நிகழ்ச்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மேற்கு மண்டல தலைவர் வி.பி.செல்வராஜ் தலைமை வகித்தார். கவுன்சிலர்கள் சுப்புலட்சுமி ஆறுமுகம் (55}வது வார்டு), நடராஜ் (52}வது வார்டு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

÷மொத்தம் 66 பயனாளிகளுக்கு தலா ரூ. 28 ஆயிரத்து 350 மதிப்பிலான காசோலைகளை மண்டல தலைவர் செல்வராஜ் வழங்கினார்.

Last Updated on Thursday, 08 April 2010 09:47