Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

பரங்கிப்பேட்டையில் 168 வீடுகள் திறப்பு : இரண்டு அமைச்சர்கள் பங்கேற்பு

Print PDF

தினமலர் 06.05.2010

பரங்கிப்பேட்டையில் 168 வீடுகள் திறப்பு : இரண்டு அமைச்சர்கள் பங்கேற்பு

பரங்கிப்பேட்டை : குடிசை மாற்று வாரியம் சார்பில் 168 குடியிருப்புகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பரங்கிப்பேட்டை சின்னூரில் நடந்தது.கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். சேர்மன்கள் முத்துபெருமாள், செந்தில்குமார் முன் னிலை வகித்தனர். பேரூராட்சி சேர்மன் முகமது யூனுஸ் வரவேற்றார். குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ராஜிவ் காந்தி மறுவாழ்வு திட்டத் தின் கீழ் 6 கோடியே 20 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதியதாக கட் டப்பட்ட 168 வீடுகளை குடிசைமாற்று வாரியம் மற்றும் இடவசதி கட்டுப் பாட்டு துறை அமைச்சர் தங்கவேலன் திறந்து வைத்து பயனாளிகளுக்கு சாவிகளை வழங்கினார்.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் வழங் கப்பட்ட அரசு நலத்திட்ட உதவிகளை மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் வழங்கினார்.

விழாவில் டி.ஆர்.., நடராஜன், பரங்கிப் பேட்டை துணை சேர்மன் செழியன், குமராட்சி சேர் மன் மாமல்லன், ஊராட்சி தலைவர் பழனி, மாவட்ட பிரதிநிதி காண்டீபன், நகர செயலாளர் பாண்டியன், இளைஞரணி அமைப் பாளர் முனைவர் உசேன், கவுன்சிலர்கள் ஜெகநாதன், காஜாகமால், செயல் அலுவலர் ஜீஜாபாய், எம்.கே.எம்.எஸ்., கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர்கள் பஷீருல்லா, முஸ்தாக், புகழேந்தி, அருள்வாசகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 06 May 2010 07:39
 

வீட்டுவசதி வாரியம் மூலம் 4 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு: வாரியக் கண்காணிப்பு பொறியாளர் தகவல்

Print PDF

தினமணி 05.05.2010

வீட்டுவசதி வாரியம் மூலம் 4 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு: வாரியக் கண்காணிப்பு பொறியாளர் தகவல்

ஈரோடு, மே 4: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் 4 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு, பொதுமக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வீட்டுவசதி வாரியக் கண்காணிப்புப் பொறியாளர் எஸ்.எஸ்.நாராயணமூர்த்தி தெரிவித்தார்.

ஈரோடு பெரியார் நகர் பகுதியில் வீட்டுவசதி வாரியம் மூலம் 72 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதில் 61 வீடுகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும். ஏற்கனவே இவ்வீடுகள்கோரி விண்ணப்பித்துள்ளோருக்கான ஒதுக்கீடு குலுக்கல் ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வீட்டுவசதி வாரியக் கண்காணிப்புப் பொறியாளர் எஸ்.எஸ்.நாராயணமூர்த்தி, செயற்பொறியாளர் எஸ்.விஜயகுமார், உதவி செயற்பொறியாளர் ஆர்.நடராஜன், ஈரோடு வருவாய்க் கோட்டாட்சியர் பெஞ்சமின்பாபு ஆகியோர் முன்னிலையில் குலுக்கல் நடைபெற்றது.

பின்னர் கண்காணிப்புப் பொறியாளர் நாராயணமூர்த்தி, நிருபர்களிடம் கூறியது: ÷பெரியார் நகரில் உயர்வருவாய் பிரிவினருக்காக கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு, ரூ.13.45 லட்சம் விற்பனைத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்ற குலுக்கலில் வீடு ஒதுக்கப் பெற்றவர்கள், ஓராண்டுக்குள் தொகை முழுவதையும் செலுத்த வேண்டும்.

தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 96 ஆயிரத்து 967 வீடுகள் கட்டப்பட்டு, பொதுமக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவலர்களுக்கான 26 ஆயிரம் வாடகை வீடுகளும் இதில் அடங்கும். தற்போது கோவை மாவட்டம், வெள்ளக்கிணறு பகுதியில் 98 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றுக்கான ஒதுக்கீடு குலுக்கல் புதன்கிழமை நடைபெற உள்ளது.

சென்னை அம்பத்தூர், முகப்பேர், சோளிங்கநல்லூரில் கட்டப்பட்ட வீடுகள், அண்மையில் பொதுமக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. மேலும் சோளிங்கநல்லூரில் 400 வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் தாராபுரத்தில் 53 வீடுகள் கட்டத் திட்டம் தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குடிசை மாற்று வாரியத்துக்கான வீடுகளும் வீட்டுவசதி வாரியம் மூலம் தரமான முறையில் கட்டப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே வழங்கப்பட்ட வீடுகளில் உள்ள பழுதுகளைக் கண்டறிய, தொழில்நுட்ப வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தரும் அறிக்கையின்படி, பழைய வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகளைக் கட்டுவது, பழுதுகளைச் சீரமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெறும்.

அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்ற வீடுகளைக் கட்டுவதற்கான பணிகளில் வீட்டுவசதி வாரியம் ஈடுபட்டுள்ளது. சோளிங்கநல்லூரில் 400 வீடுகளும், அம்பத்தூரில் 608 வீடுகளும் குறைந்த வருவாய் பிரிவினருக்காக கட்டப்பட்டு வருகின்றன.

வீட்டுவசதி வாரிய வீடுகள் கட்டுவதற்காக பெறப்பட்ட நிலங்களை, மீண்டும் உரிமையாளர்களிடம் திருப்பித்தர தேவையில்லை. ஏனெனில் இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் தெளிவான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில்தான், இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படுகிறது என்றார்.

 

வீட்டு வசதி வாரிய வீடுகள்: புதுப்பிக்கும் பணி தீவிரம்

Print PDF

தினமலர் 05.05.2010

வீட்டு வசதி வாரிய வீடுகள்: புதுப்பிக்கும் பணி தீவிரம்

ஈரோடு: ''பழுதான வீடுகளை தொழில் நுட்ப வல்லுநர்கள் மூலம் புதுப்பிக்கும் பணி நடக்கிறது,'' என வீட்டு வசதி வாரிய மேற்பார்வை பொறியாளர் நாராயணமூர்த்தி கூறினார்.வீட்டு வசதி வாரியம் சார்பில் ஈரோடு பெரியார் நகரில் 72 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. குலுக்கல் முறையில் வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீட்டு வசதி வாரிய மேற்பொறியாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:வீட்டு வசதி வாரியம் சார்பில் இதுவரை மூன்று லட்சத்து 96 ஆயிரத்து 967 வீடுகள் கட்டப்பட்டு, மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு மட்டும் 26 ஆயிரம் குடியிருப்புகள் அடங்கும். கோவை வெள்ளகிணறு பகுதியில் 98 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதற்கு குலுக்கல் நிகழ்ச்சி நாளை (இன்று) நடக்கிறது. சென்னை அம்பத்தூர், முகப்பேர், சோளிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகள் மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சோளிங்கநல்லூரில் 400 வீடுகள், தாராபுரத்தில் 53 வீடுகள் கட்டும் திட்ட வரைவு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு அவர்கள் விரும்பும் வங்கிகளில் கடன் வசதி செய்து தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 'ஒரு திட்டத்துக்காக எடுக்கப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைக்க தேவையில்லை' என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், வீட்டு வசதி வாரிய நிலம் பெறப்படுவதில் பிரச்னை எதுவும் இல்லை. குடிசை மாற்று வாரியத்துக்காக, வீட்டு வசதி வாரியம் சார்பில் வீடுகள் கட்டித் தரப்படுகிறது. பழுதான வீடுகளை தொழில் நுட்ப வல்லுனர்கள் மூலம் புதுப்பிக்கும் பணி நடக்கிறது.

அனைத்து வருவாய் பிரிவினரும் வீடுகள் வாங்கும் வகையில் சோளிங்கநல்லூரில் 400 வீடுகள், அம்பத்தூரில் 608 வீடுகள் கட்டப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஈரோடு பெரியார் நகரில் கட்டப்பட்ட 72 வீடுகளில் 11 வீடுகள் அரசு ஊழியர்களுக்கும், மற்றவர்களுக்கு 61 வீடுகளும் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஒரு வீடு 13 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. ஈரோடு செயற்பொறியாளர் விஜயகுமார் மற்றும் வீட்டு வசதி வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Wednesday, 05 May 2010 06:27
 


Page 35 of 69