Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

வீட்டு வசதி வாரியம் எச்சரிக்கை அறிவிப்பு

Print PDF

தினமலர் 19.03.2010

வீட்டு வசதி வாரியம் எச்சரிக்கை அறிவிப்பு

ஈரோடு: தமிழக வீட்டுவசதி வாரியம் சார்பில் வீடு வாங்கியவர்கள், நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால், ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஈரோடு வீட்டுவசதி பிரிவு செயற்பொறியாளர் விஜயகுமார் அறிக்கை:தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், ஈரோடு வீட்டுவசதி பிரிவில் அபிவிருத்தி செய்யப்பட்ட மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, தவணை முறை திட்டத்தில் பொதுமக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தவணை முறை திட்டத்தில் பெரியார் நகர், பள்ளிபாளையம், சம்பத்நகர், பெருந்துறை, சத்தியமங்கலம், தாராபுரம், நசியனூர் சாலை, முத்தம்பாளையம் மற்றும் கோபி ஆகிய இடங்களில் வீடு பெற்றுள்ளவர்களில், மூன்று மாதத்துக்கு மேல் பணம் கட்டாதவர்கள் உள்ளனர். அவர்களின் ஒதுக்கீடு மறு அறிவிப்பின்றி ரத்து செய்யப்படும். ஒதுக்கீடுதாரர்கள் உடனடியாக நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும். வாரியத்தால் இறுதி விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள திட்டங்களுக்கு, தொகை செலுத்தும் ஒதுக்கீடுதாரர்களுக்கு உடனடியாக கிரயப்பத்திரம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Last Updated on Friday, 19 March 2010 06:26
 

வீடு கட்டும் திட்டம்: விண்ணப்பம் வரவேற்பு

Print PDF

தினமணி 18.03.2010

வீடு கட்டும் திட்டம்: விண்ணப்பம் வரவேற்பு

மதுரை, மார்ச் 17: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், மதுரை வீட்டு வசதி பிரிவின் மூலம் சுயநிதி திட்டத்தின்கீழ் மதுரை எல்லீஸ் நகரில் (புறவழிச்சாலை அருகில்) 104 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படும் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் வரும் 30}ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31.3.2010 வரை பதிவு செய்யப்படும். மதுரை வீட்டு வசதிப் பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி அலுவலகம் இத்தகவலைத் தெரிவித்துள்ளது.

Last Updated on Thursday, 18 March 2010 11:28
 

ஒருங்கிணைந்த குடிசை மேம்பாட்டு திட்டத்தில்176 பயனாளிகளுக்கு ரூ.37 லட்சம் வழங்கல்

Print PDF

தினமலர் 12.03.2010

ஒருங்கிணைந்த குடிசை மேம்பாட்டு திட்டத்தில்176 பயனாளிகளுக்கு ரூ.37 லட்சம் வழங்கல்

திருநெல்வேலி:ஒருங்கிணைந்த வீட்டு வசதி மற்றும் குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களிலும் வாழும் 176 பயனாளிகளுக்கு ரூ.37 லட்சத்து 9 ஆயிரத்து 500க்கான செக்குகளை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் வழங்கினார்.

நெல்லை மண்டலத்தில் 54 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 2 ஆயிரத்து 500, தச்சநல்லூர் மண்டலத்தில் 50 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 89 ஆயிரமும், பாளை., மண்டலத்தில் 65 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 74 ஆயிரமும், மேலப்பாளையம் மண்டலத்தில் 7 பயனாளிகளுக்கு ஒரு லட்சத்து 44 ஆயிரமும் சேர்த்து மொத்தம் 176 பயனாளிகளுக்கு ரூ.37 லட்சத்து 9 ஆயிரத்து 500க்கான செக்குகளை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் வழங்கினார். இதில் மாநகராட்சி துணைமேயர் முத்துராமலிங்கம், கமிஷனர் பாஸ்கரன், மேலப்பாளையம் மண்டல தலைவர் எஸ்.எஸ்.முகம்மது மைதீன், மாநகரப் பொறியாளர் ஜெய்சேவியர், செயற்பொறியாளர் நாராயணன் நாயர் மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Last Updated on Friday, 12 March 2010 06:32
 


Page 44 of 69