Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

கோவையில் 602 வீடுகளை இடிக்க அதிரடி முடிவு : ரூ.6.60 கோடியில் பழைய வீடுகள் சீரமைப்பு

Print PDF

தினமலர் 11.03.2010

கோவையில் 602 வீடுகளை இடிக்க அதிரடி முடிவு : ரூ.6.60 கோடியில் பழைய வீடுகள் சீரமைப்பு

கோவை : செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, கோவையிலுள்ள அரசு அலுவலர்கள் குடியிருப்புகளைச் சீரமைக்க 6 கோடியே 60 லட்ச ரூபாய் மதிப்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கோவை பிரிவுக்குச் சொந்தமாக, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 3,410 வாடகைக் குடியிருப்புகள் உள்ளன. ,பி,சி,டி மற்றும் "' என 5 வகையான வீடுகள் தனித்தனியாகக் கட்டப்பட்டு, அரசு அலுவலர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

கோவை நகரில் ரேஸ்கோர்ஸ், சிங்காநல்லூர், காந்திபுரம், கணபதி உட்பட பல இடங்களில் 2,508 வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் பெரும்பாலும், 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்டவை. வீடுகளைப் பராமரிக்க ஆண்டுதோறும் தரப்படும் நிதி, யானைப்பசிக்கு சோளப்பொறி போன்றது.

வீடுகளில் வசிக்கும் அரசு அலுவலர்களே, அவரவர் வீடுகளின் உட்புறத்தில் மட்டும் தேவையான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வர். வெளிப்புறத்தில், எந்த சீரமைப்புப் பணியும் நடப்பதே இல்லை. இதனால், பெரும்பாலான குடியிருப்புகள் இடிந்து, சிதிலமடைந்து, குடியிருக்க லாயக்கற்றதாகி விட்டன. பல குடியிருப்புகளில் முற்றிலுமாக ஆட்கள் இல்லாமல் காலியாகவுள்ளன. பல கட்டடங்கள் எந்த நேரத்திலும் இடிந்து விழத் தயாராகவுள்ளன. உக்கடத்தில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்து 13 பேர் பலியான பின்பே, மற்ற குடியிருப்புகள் அனைத்தும் இடிக்கப் பட்டன.

கிட்டத்தட்ட இந்த குடியிருப்புகளின் நிலையும் இதே என்றாலும், இவற்றை இடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்க ப்படவில்லை. செம்மொழி மாநாட்டுக்காக கோவையில் 300 கோடி ரூபாய் மதிப்பில் ஏராளமான மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், அரசு அலுவலர் குடியிருப்புகளை அரசு கண்டுகொள்ளவே இல்லை என்று அலுவலர்கள் மத்தியில் குமுறல் இருந்தது. இது தொடர்பாக, "தினமலர்'நாளிதழில் படத்துடன் விரிவான செய்தி வெளியிடப் பட்டது. இதைத் தொடர்ந்து, அரசு தரப்பில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது.இந்த வீடுகளில் மோசமான நிலையில் உள்ள வீடுகளை இடிக்கவும், மற்ற வீடுகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இடிக்கப்பட வேண்டிய வீடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. முதலில், ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஏராளமான வீடுகள் இடிக்கப்படவுள்ளன.

தாமஸ் பார்க் பகுதியில் 222, டி.எப்..,குடியிருப்பில் 108, காந்திபுரத்தில் 8, உப்பிலிப்பாளையத்தில் 192, சீரநாயக்கன்பாளையத்தில் 54, கவுண்டம் பாளையத்தில் 18 என மொத்தம் 602 வீடுகளை இடிக்க வீட்டு வசதி வாரியம் முடிவு செய்துள்ளது.

இவற்றை இடித்து விட்டு, அதே இடத்தில் புதிய வீடுகள் கட்ட மதிப்பீடு தயாரிக்கப்படும். அதற்கு முன்பாக, மற்ற வீடுகளைச் சீரமைக்க, வாரியம் முடிவு செய்து, 6 கோடியே 60 லட்ச ரூபாய்க்கு மதிப்பீடு தயாரித்து, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.

ரேஸ்கோர்ஸ் பகுதி வீடுகளைச் சீரமைக்க ஒரு கோடியே 70 லட்ச ரூபாயும், சிங்காநல்லூரில் 234 வீடுகளைச் சீரமைக்க 86 லட்ச ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. ஒப்புதலும், நிதியும் கிடைத்தவுடன் விரைவில் பணிகள் துவங்குமென்று வீட்டு வசதி வாரிய பொறியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த தொகையில், அரசு அலுவலர் குடியிருப்புகளின் உள்ளும், புறமும் சீரமைக்கப்படும்; குடிநீர், உப்பு நீருக்கு தனித்தனி சின்டெக்ஸ் தொட்டிகள் வைக்கப்படும். இதனால், அரசு அலுவலர் குடியிருப்புகள் புதுப்பொலிவு பெறும் என்பதால் அரசு அலுவலர்கள் பெரு மகிழ்ச்சியில் உள்ளனர்.சபாஷ் கலெக்டர்! அரசு அலுவலர்களின் அவலம் பற்றி, இதற்கு முன்பாக இருந்த பல கலெக்டர்களிடமும் ஏராளமான மனுக்கள் தரப்பட்டுள்ளன; ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது அரசு எடுத்துள்ள முடிவுக்கு, கலெக்டர் உமாநாத்தின் முயற்சியும் முக்கியக் காரணம். இதற்காக முழு முயற்சி எடுத்த அவர், நேற்று ரேஸ்கோர்ஸ் பகுதியில் சிதிலமடைந்த வீடுகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து, அப்பகுதி பெண்கள் கூறுகையில், " இந்த அம்மன் கோவிலில் மகளிர் நல மருத்துவமனைக்கு வருவோர் நலம் பெற வேண்டிக் கொள்வார்கள். வேண்டுதலும் நிறைவேறி வந்தது. இந்நிலையில், எந்தவித முன்னறிவிப்புமின்றி அம்மன் கோவில் இடிக்கப்பட்டது. மருத்துவமனை விரிவாகத்திற்காக அம்மன் கோவில் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், விரிவாக்கம் செய் யப்பட்ட பின் அந்த வளாகத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் மீண்டும் சிறிய அளவிலாவது அம்மன் கோவில் அமைக்க வேண்டும்,' என்றனர். அதேபோல, சாலை விரிவாக் கத்திற்காக புளியந்தோப்பு நெடுஞ் சாலை முகப்பில் இருந்த போலீஸ் பூத் மற்றும் ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றப்பட்டன. நேற்று முன் தினம் புதுவண்ணாரப்பேட்டை, இளைய முதலித் தெருவில் கடந்த பல ஆண்டுகளாக பா...,வினரால் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த உடற்பயிற்சி மையம் உள் ளிட்ட குடிசைகள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Last Updated on Thursday, 11 March 2010 05:55
 

குடிசை மேம்பாட்டு திட்டம் ரூ.20.88 கோடி நிதி ஒதுக்கீடு

Print PDF

தினமலர் 10.03.2010

குடிசை மேம்பாட்டு திட்டம் ரூ.20.88 கோடி நிதி ஒதுக்கீடு

அருப்புக்கோட்டை: ஒருங்கிணைந்த குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு மத்திய அரசு 20.88 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.அருப்புக்கோட்டை நகராட்சி பகுதியில் குடிசை வீடுகளை மாற்றி "கான்கிரீட்' வீடுகள் கட்டுவதற்கு மத்திய அரசு மானியத்துடன் கூடிய நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன்படி நகராட்சியில் 12 குடிசை பகுதிகளில் 879 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். 250 சதுர அடியில் ஒரு வீடு கட்ட ஒரு லட்சத்து 10 ஆயிரம் நிதி தரப்படும். இதில் மத்திய அரசு 80 ஆயிரம் ரூபாய் மானியமும், மாநில அரசு 10 ஆயிரம் ரூபாய் மானியமும் வழங்குகிறது. மீதத் தொகையை பயனாளிகளிடம் பெற்று வீடு கட்டி தரப்படும். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் விருதுநகர் எம்.பி., மாணிக்தாகூர் பரிந்துரையின்பேரில் மத்திய அரசு 20.88 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த வீடுகள் கட்டப்படும் பகுதிகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும். வீடு கட்டும் பணிகள் விரைவில் துவங்கப்படும் என நகராட்சி தலைவர் சிவபிரகாசம் தெரிவித்தார்.

Last Updated on Wednesday, 10 March 2010 06:46
 

10-ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி, நகர்ப்புற மக்களுக்கு புதிய வீட்டு வசதித் திட்டம்

Print PDF

தினமணி 06.03.2010

10-ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி, நகர்ப்புற மக்களுக்கு புதிய வீட்டு வசதித் திட்டம்

பெங்களூர், மார்ச் 5: 10-ம் வகுப்பு வரை அனைவருக்கும் கட்டாயக் கல்வி, நகர்ப் பகுதியில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்காக வீடு கட்டும் "நன்ன மனே' திட்டத்தை பட்ஜெட்டில் அறிவித்தார் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா.

2010-11-ம் ஆண்டிற்கான கர்நாடக பட்ஜெட்டை நிதித் துறை பொறுப்பை வகிக்கும் முதல்வர் எடியூரப்பா வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியது:

2009-ம் ஆண்டில் வறட்சி நிவாரணப் பணிக்காக அரசு ரூ.206 கோடி செலவிட்டது. வட கர்நாடகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டது. பொதுமக்களிடமிருந்து ரூ.317.9 கோடி நிவாரண நிதி திரட்டப்பட்டது. 75 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் மதிப்பில் 75 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெள்ள மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ரூ.1457 கோடி அளித்தது. மாநில அரசு இதுவரை ரூ.1879 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையிலும் மாநில அரசின் நிதி நிலை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் திருப்திகரமாக உள்ளது. மாநில அரசின் வரி வருவாய் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளது. இது நாட்டிலேயே அதிகமானது. மற்ற மாநிலங்களில் சராசரி வரி வருவாய் 6 சதவிகிதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

விவசாயத் துறையில் 2-வது பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் வறண்ட பகுதிகளில் விவசாய நடவடிக்கையை அதிகப்படுத்தம் திட்டத்தை கடந்த ஆண்டு அரசு அறிவித்தது. அத்திட்டத்தை வெற்றியடைச் செய்ய நிலத்தடி நீர் சேகரிப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. விவசாய விளை பொருள் விற்பனை சந்தைகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளது.

21-ம் நூற்றாண்டில் அனைவருக்கும் கல்வி என்று இல்லாமல் அனைவருக்கும் உயர் கல்வி அளிக்க அரசு உறுதி பூண்டுள்ளது. அதன்படி 2010-ம் ஆண்டில் அனைவருக்கும் 10-ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வித் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. எல்லா மாவட்டங்களிலும் மாதிரி பொது மாணவர் விடுதி கட்டப்படும்.

படித்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் திறமை பயிற்சி நிலையங்கள் மாநிலத்தில் அதிக அளவில் திறக்கப்படும். இந்த மையங்கள் மூலம் ஆண்டுக்கு 3 முதல் 5 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் தொழில் நகரம் அமைக்கப்படும். மாநிலத்தில் தற்போது 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

அடுத்த 3 ஆண்டுகளில் குறைந்தது 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

2009-10-ம் நிதி ஆண்டில் பல்வேறு வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் 5.35 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கிராமப் புறங்களில் கட்டப்படும் வீடுகள் தற்போது ரூ.40 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்படுகின்றன. இனி இவை ரூ.60 ஆயிரம் செலவில் கட்டப்படும். இதில் ரூ.10 ஆயிரத்தை வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுவோர் கட்ட வேண்டும். இந்தத் தொகையை வங்கிகளில் இருந்து குறைந்த வட்டிக்கு கடனாகப் பெற அரசு நடவடிக்கை எடுக்கும். இந்தத்திட்டப்படி நடப்பு ஆண்டில் 1.5 லட்சம் வீடுகள் கட்டப்படும்.

நகர்ப்பகுதிகளில் 2010-11-ம் ஆண்டில் வாஜ்பாய் வீட்டு வசதித்திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் வீடுகள் கட்டப்படும். இந்த வீடுகள் ஒவ்வொன்றும் ரூ.1.25 லட்சம் செலவில் கட்டப்படும். இதற்கு வங்கிகள் கடனுதவி, அரசு மானியம் என எல்லா வசதிகளும் அளிக்கப்படும்.

பெங்களூர் போன்ற பெரிய நகரங்கள், சிறிய நகரங்களில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தை அரசு இந்த ஆணóடு அறிமுகப்படுத்துகிறது "நன்ன மனே' என்று பெயரிடப்பட்டுள்ள அத்திட்டப்படி குறைந்த விலையில் நடுத்தர வர்க்கத்தினருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.

2010-11-ம் ஆண்டில் ஊகரம் மற்றும் நகர்ப்புறங்களில் வீடுகள் கட்டிக் கொடுக்க ரூ.920 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. துவக்க மற்றும் நடுநிலைக் கல்விக்காக 2010-11-ம் ஆண்டில் கல்விக்கு ரூ.8,830 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கு இந்த ஆண்டு ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வியறிவு விகிதத்தை அதிகப்படுத்தும் நோக்கத்தோடு ராஷ்டீரிய மாத்யமிக சிக்ஷக அபியான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் 545 உயர்நிலைப் பள்ளிகளில் ரூ.700 கோடி செலவில் அனைத்து வசதிகளும் இந்த நிதியாண்டில் செய்து கொடுக்கப்படும்.

பள்ளிகளுக்கு வகுப்பறைகள், கருவிகள், குடிநீர் வசதி மற்றும் கழிப்பறைகள் வசதி ஏற்படுத்திக் கொடுக்க ரூ.100 கோடி ஒதுக்கப்படுகிறது. அரசு பள்ளி ஆசிரியர்கள் பட்டப்படிப்பு கல்வி, முதுகலைக் கல்வி பயில அவர்களுக்கு உதவும் வகையில் பட்ஜெட்டில் ரூ.5 கோடி ஒதுக்கப்படுகிறது. கர்நாடகத்தில் தற்போது 12 சதவிகிதம் பேரே உயர் கல்வி பயிலுகிறார்கள். இதை 25 சதவிகிதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்மையில் அமைக்கப்பட்ட தும்கூர், தாவணகெரே பல்கலைக்கழகங்கள் மற்றும் பிஜாப்பூர் பெண்கள் பல்கலைக்கழங்களின் அடிப்படை வசதிக்காக ரூ.10 கோடி ஒதுக்கப்படுகிறது. அதுபோல் ஹம்பியில் உள்ள கன்னட பல்கலைக் கழகத்துக்கு ரூ.5 கோடி ஒதுக்கப்படுகிறது. அரசு பொறியியல் கல்லூரிகளில் அடிப்படை வசதிகளைப் பெருக்க ரூ.80 கோடி ஒதுக்கப்படுகிறது. அதுபோல் 10 பொறியியல் கல்லூரிகளுக்கும், 22 பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் கட்டடங்கள் கட்ட ரூ.76 கோடி ஒதுக்கப்படுகிறது. மாநிலத்தில் உள்ள 357 அரசு முதன் நிலைக் கல்லூரிகளில் 167 கல்லூரிகளில் மட்டுமே அறிவியல், மற்றும் வணிகவியல் பாடங்களைச் சொல்லிக் கொடுக்க வசதி உள்ளது. எனவே நடப்பு நிதியாண்டில் மேலும் 100 கல்லூரிகளில் அந்த வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

அரசுப் பள்ளி மாணவர்களின் ஆற்றலைப் பெருக்கி வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்யும் பயிற்சிக்காக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பெல்லாரியில் விஜயநகர் பல்கலைக்கழகம் துவக்கப்படும். இதற்கு ரூ.10 கோடி ஒதுக்கப்படுகிறது. தார்வாட்டில் உள்ள கர்நாடக பல்கலைக் கழகத்தில் டி.என்.. பரிசோதனை நிலையம் அமைக்க ரூ.4 கோடி ஒதுக்கப்படுகிறது. பெங்களூரில் சமஸ்கிருத பல்கலைக்கழகம் அமைக்க ரூ.5 கோடியும், குல்பர்காவில் பாலி மொழி கல்விக்கு ரூ.1 கோடியும் ஒதுக்கப்படுகிறது என்றார் முதல்வர்.

Last Updated on Saturday, 06 March 2010 08:08
 


Page 45 of 69