Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

வீட்டு வசதி திட்டத்துக்கு குடிசை வீடுகள் கணக்கெடுப்பு

Print PDF

தினமலர் 22.02.2010

வீட்டு வசதி திட்டத்துக்கு குடிசை வீடுகள் கணக்கெடுப்பு

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டத்தில் கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட வசதியாக குடிசை வீடுகள் குறித்து கணக்கெடுப்பு பணி நடக்கிறது. தமிழக அரசு சமீபத்தில் தமிழகத்தில் உள்ள குடிசை வீடுகள் எல்லாம் கான்கிரீட் வீடுகளாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கலைஞர் வீட்டு வசதி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இத்திட்டத்தை தர்மபுரி மாவட்டத்தில் செயல்படுத்திட முதல் கட்டமாக ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனிலும் ஒரு பஞ்சாயத்து வீதம் மாதிரி கிராமமாக தேர்வு செய்யப்பட்டு, குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பணி வி..., பஞ்சாயத்து எழுத்தர், மக்கள் நலப்பணியாளர்கள் கொண்ட குழு மூலம் கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது.இக்குழு பணிகளை கண்காணிக்க அந்தந்த ஒன்றியத்தின் துணை பி.டி.., ஆய்வு செய்ய நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் எட்டு பஞ்சாயத்து யூனியன்களான தர்மபுரிக்கு கடத்தூர், நல்லம்பள்ளி யூனியனில் சிவாடி, பென்னாகரம் யூனியனில் பள்ளிப்பட்டியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.அரூர் யூனியனில் கே.வேட்ரப்பட்டியும், மொரப்பூர் யூனியனில் ஈச்சம்பாடியும், பாப்பிரெட்டிப்பட்டி யூனியனில் போதக்காடு, காரிமங்கலம் யூனியனில் அனுமந்தபுரமும், பாலக்கோடு யூனியனில் சூடனூர் ஆகிய கிராம பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு, குடிசை வீடுகள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகுடறது.பென்னாகரம் யூனியன் பள்ளிப்பட்டி பஞ்சாயத்துபகுதியில் நடந்து வரும் கணக்கெடுப்பு பணியை கலெக்டர் அமுதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். "சரியான முறையில் கணக்கெடுப்பு பணிகளை செய்திட வேண்டும். குறைகள் ஏதாவது வந்தால் சம்பந்தப்பட்ட கணக்கெடுப்பு குழு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என குழுவினருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். பென்னாகரம் பி.டி.., ராஜேந்திரன், துணை பி.டி.., ஜெயகாந்தன் உட்பட பலர் ஆய்வின் போது கலந்து கொண்டனர்

Last Updated on Monday, 22 February 2010 06:20
 

கிராமப்புற மறுசீரமைப்பு திட்டத்தில் 3267 குடியிருப்புகள்

Print PDF

தினமலர் 17.02.2010

கிராமப்புற மறுசீரமைப்பு திட்டத்தில் 3267 குடியிருப்புகள்

பரங்கிப்பேட்டை : ராஜிவ்காந்தி கிராமப்புற மறுசீரமைப்பு திட்டத்தில் மாவட்டத்தில் 3267 குடியிருப்புகள் கட் டப்பட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்தார்.பரங்கிப்பேட்டை மாதாகோவில் தெருவில் சுனாமியால் பாதித்தவர்களுக்கு சசி தொண்டு நிறுவனம் சார்பில் 50 பயனாளிகளுக்கு தலா 2 லட்சத்து 80 ஆயிரம் வீதம் ஒரு கோடியே 40 லட்சம் செலவில் நிரந்தர குடியிருப்புகள் கட்டப்பட்டு நேற்று திறக்கப்பட்டது.சசி தொண்டு நிறுவன இயக்குநர் ரமேஷ்நாதன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் மோகன், பேரூராட்சி சேர் மன் முகமது யூனுஸ் முன் னிலை வகித்தனர். திட்ட அலுவலர் கவுரிசங்கர் வரவேற்றார்.குடியிருப்புகளை திறந்து வைத்து கலெக்டர் சீத்தாராமன் பேசுகையில், சுனாமியால் பாதித்த 50 பயனாளிகளுக்கு சசி தொண்டு நிறுவனம் குடியிருப்புகள் கட்டிகொடுத் துள்ளது. அதுபோல் சுனாமியால் பாதித்தவர்களுக்கு 31 கிராமங்களில் முதல் சுற்றில் 2 ஆயிரத்து 203 வீடுகளும், இரண்டாவது சுற்றில் 37 கிராமங்களில் 2 ஆயிரத்து 792 வீடுகளும் கட்டிகொடுக்கப்பட் டுள்ளது.ராஜிவ்காந்தி கிராமப் புற மறுசீரமைப்பு திட்டத் தில் 3267 வீடுகள் கட்ட அனுமதியளிக்கப் பட்டு அதில் 1578 கிராமங்களிலும், 1678 நகரப்புறங்களிலும் வீடுகள் கட் டப்பட்டு வருகிறது என்றார்.விழாவில் தாசில்தார் காமராஜ், பேரூராட்சி துணைத் தலைவர் செழியன், கே.என்.எச்., ஜெர் மன் தலைவர் கிடோபால் கன்பர்க், இந்திய ஒருங்கிணைப்பாளர் சதீஷ் சாமுவேல், ஒன்றிய ஆணையர் சுப்ரமணியன், செயல் அலுவலர் ஜிஜாபாய் உள் ளிட்டோர் பங் கேற்றனர்.

Last Updated on Wednesday, 17 February 2010 05:20
 

வீடுகளை தரம் குறையாமல் கட்டினால் பரிசு: மு.க. ஸ்டாலின்

Print PDF

தினமணி 12.02.2010

வீடுகளை தரம் குறையாமல் கட்டினால் பரிசு: மு.. ஸ்டாலின்

தாம்பரம், பிப்.11: கட்டப்படவுள்ள 26,144 வீடுகளை தரம் சிறிதும் குறையாமல் ஒரு ஆண்டுக்குள் கட்டி முடித்தால் உரிய பரிசு வழங்கப்படும் என்று மு.. ஸ்டாலின் கூறினார்.

அவசர சுனாமி மறு குடியமர்வுத் திட்டத்தின் கீழ், சென்னை மெரீனா மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளில் ரூ.1247.12 கோடியில் கட்டப்படவுள்ள 26,144 அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் செம்மஞ்சேரி புதிய பேருந்து நிலையம் ஆகியவற்றின் அடிக்கல் நாட்டுவிழா சென்னை செம்மஞ்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அடிக்கல் நாட்டி துணை முதல்வர் மு..ஸ்டாலின் பேசியது:

கடந்த 1970 முதல் 2006 வரை 36 ஆண்டுகளில் 77,627 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், 2006}க்கு பிறகு 82,000 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 42,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 40,000 வீடுகளில் 26,144 வீடுகளைக் கட்டுவதற்கு இங்கே அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

எனக்கு அடிக்கல் நாட்டு விழாக்களில் பங்கேற்பதை விட, திறப்பு விழாக்களில் பங்கேற்கவே விருப்பம். ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை முடிக்க 3 ஆண்டுகள் ஆகும் என்று அதிகாரிகள் முதல்வரிடம் கூறியபோது, 2 ஆண்டுகளில் முடித்தால் பரிசு வழங்குவதாக முதல்வர் கலைஞர் அறிவித்தார். நாங்களும் அதை ஒரு சவாலாகவே ஏற்று 21 மாதங்களில் முடித்து முதல்வரின் பாராட்டையும், ராமநாதபுரம் மக்களின் பாராட்டையும் பெற்றோம்.

அது போலவே, இந்தத் திட்டத்தையும், தரம் சிறிதும் குறையாமல், அதே சமயம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 15 மாதங்களுக்குப் பதிலாக ஒரே வருடத்தில் நிறைவேற்றித் தந்தால் உரிய பரிசு வழங்கப்படும்.

சமீபத்தில் தில்லிக்குச் சென்றிருந்தபோது நான் பல மாநில முதல்வர்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது சில அமைச்சர்கள் என்னிடம் எப்படி 21 லட்சம் வீடுகளைக் கட்டித்தரப் போகிறீர்கள் என்று கேட்டனர்.

நான் அவர்களிடம் தமிழ்நாட்டில் அடித்தட்டு மக்களுக்காக திமுக அரசு நிறைவேற்றி வரும் பல்வேறு நலத் திட்டங்களையெல்லாம் விளக்கியபோது, நாங்களும் எங்களது மாநிலங்களில் நிறைவேற்றுவோம் என்று அவர்கள் கூறினார்கள்' என்றார் மு..ஸ்டாலின்.

விழாவில் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், தா.மோ.அன்பரசன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.வி. சேகர், எஸ்.ஆர்.ராஜா, சென்னை மேயர் மா.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் கே.மிஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 12 February 2010 11:51
 


Page 47 of 69