Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

குடிசைகளை கணக்கெடுக்கும் பணி விரைவில் துவக்கம்

Print PDF

தினமலர் 12.02.2010

குடிசைகளை கணக்கெடுக்கும் பணி விரைவில் துவக்கம்

கோவை : கோவை ஊரகப் பகுதிகளில் குடிசைகளைக் கணக்கெடுக்கும் பணி, மார்ச் மாதத்தில் நடக்கவுள்ளது.கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த ஏழை மக்களின் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றித்தரும் "கலைஞர் வீட்டு வசதித்திட்டம்', வரும் நிதியாண்டில் துவங்கி 6 ஆண்டுகள் தொடரும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்கான கணக்கெடுப்புப் பணி, தமிழகம் முழுவதும் விரைவில் நடக்கவுள்ளது.

கோவை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊரகப் பகுதிகளில் இந்த திட்டத்தைச் செயல்படுத்த, மாவட்ட நிர்வாகம் ஆயத்தமாகி வருகிறது. முதற்கட்டமாக, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலிருந்தும் தலா ஒரு கிராம ஊராட்சியைத் தேர்வு செய்து, ஓலைக்குடிசைகள் கணக்கெடுக்கப்படும்.

இந்த குடிசைகளைக் கணக்கெடுக்கும் பணிக்கு, சிறப்புக்குழுவும் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவில், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி எழுத்தர், மக்கள் நலப்பணியாளர் ஆகியோர் இடம் பெறுவர். அரசால் அச்சிட்டு தரப்பட்டுள்ள படிவங்களில் மட்டுமே இதற்கான விபரம் சேகரிக்கப்படும்.

கணக்கெடுக்கும் பணி, முறையாக நடக்கிறதா என்பதைக் கண்காணிக்க துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களை அரசு நியமித்துள்ளது. மாதிரி ஊராட்சிகளில் ஓலைக்குடிசைகளைக் கணக்கெடுக்கும் பணி குறித்த பயிற்சிக் கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு தலைமை வகித்த கலெக்டர் உமாநாத், ""அடித்தட்டு மக்களின் சமூக மேம்பாட்டுக்காக அரசு செயல்படுத்தும் இந்த திட்டத்தைச் சிறப்பாக செயல் படுத்த வேண்டிய கடமை, அரசு அதிகாரிகளுக்கு உள்ளது.

எனவே, குடிசைகள் கணக்கெடுக்கும் பணியை பாரபட்சமின்றி மேற்கொள்ள வேண்டும்,'' என்றார். கணக்கெடுக்கும் பணி குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் மூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் லட்சுமிபதி ஆகியோர் விளக்கினர். கணக்கெடுக்கும் பணி, மார்ச் மாதத்தில் நடக்குமென்று பயிற்சிக் கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. பயிற்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 12 February 2010 06:47
 

குடிசை மேம்பாட்டு திட்டம் பணி ஆணை வழங்கல்

Print PDF

தினமலர் 09.02.2010

குடிசை மேம்பாட்டு திட்டம் பணி ஆணை வழங்கல்

கரூர்: ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டும் பணிக்கான பணி ஆணை கரூர் நகராட்சியில் வழங்கப்பட்டது. தலைவர் சிவகாமசுந்தரி பயனாளிகளுக்கு இதற்கான ஆணையை வழங்கினார். நகராட்சி கமிஷனர்(பொ) ராஜா, கவுன்சிலர் ராமசாமி, சமுதாய அமைப்பாளர் ராஜேஸ்வரி மற்றும் பலர் உடனிருந்தனர். திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து ஏழாயிரம் மதிப்பீட்டில் பயனாளிகள் வீடு கட்டிக்கொள்ள மத்திய, மாநில அரசு மானியத்தொகையாக 77 ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. மீதமுள்ள தொகையை பயனாளியே ஈடு செய்ய வேண்டும். பரிந்துரைக்கப்படும் வடிவமைப்பு மற்றும் திட்ட மதிப்பீட்டின் அடிப்படையில்தான் புதிய வீடு அமைய வேண்டும். பணி ஆணை கிடைத்த 15 நாட்களில் பணி துவங்கப்பட வேண்டும். தினசரி பணி நிலவரம் நகராட்சிக்கு தெரிவிக்கப்பட வேண்டும். மூன்று மாதங்களில் பணி முடிக்கப்பட்டு அறிக்கை அளிக்கப்பட வேண்டும்.

Last Updated on Tuesday, 09 February 2010 10:28
 

மதுரை வீட்டு வசதிப் பிரிவு அதிகாரி அறிவிப்பு

Print PDF

தினமணி 04.02.2010

மதுரை வீட்டு வசதிப் பிரிவு அதிகாரி அறிவிப்பு

மதுரை, பிப். 3: மதுரை வீட்டு வசதிப் பிரிவில் ஒதுக்கீடு பெற்று முழுத் தொகை செலுத்திய அனைத்து ஒதுக்கீடுதாரர்களும் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து வரும் 28.02.2010}குள் கிரயப் பத்திரம் பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட கோப்புகள் அனைத்தும் மதுரை வீட்டு வசதிப் பிரிவு அறைக்கு அனுப்பிவைக்கப்படும்.

இதனால், ஏற்படும் நடைமுறைச் சிக்கலைத் தவிர்க்க, மேலே குறிப்பிட்ட தேதிக்குள் மதுரை வீட்டு வசதிப் பிரிவு அலுவலகத்தை தொடர்புகொண்டு கிரயப் பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வீட்டு வசதிப் பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி பி.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Last Updated on Thursday, 04 February 2010 11:02
 


Page 48 of 69