Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி வீடுகளுக்கு அதிரடி விலை குறைப்பு

Print PDF

தினகரன் 03.02.2010

வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி வீடுகளுக்கு அதிரடி விலை குறைப்பு

புதுச்சேரி : புதுவை வீட்டுவசதி வாரியம், சாரம் வருவாய் கிராமம், சுதந்திர பொன்விழா நகர் திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 64 (எல்ஐஜி) ஒரு படுக்கை அறை கொண்ட அடுக்குமாடி வீடுகளுக்கான தோராய விலை ரூ.15 லட்சத்து 25 ஆயிரம் என அறிவிக்கப்பட்டது. விற்பனைக்கான விண்ணப்ப படிவங்களை பொது மக்களிடம் இருந்து வரவேற்கப்பட்டு, 25.11.2009 அன்று குலுக்கல் முறையில் பலருக்கு ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஒதுக்கீடு பெற்றவர்கள் வீட்டின் விலை அதிகமாக இருக்கிறது என்றும், அதை மறுபரிசீலனை செய்து விலையை குறைத்து கொடுக்க புதுவை வீட்டுவசதி வாரிய தலைவரை கேட்டுக்கொண்டதன் பேரில், அவரது ஆணைப்படி ஒரு படுக்கை அறை கொண்ட அடுக்கு மாடி வீட்டுக்கான தோராய விலை ரூ.15 லட்சத்து 25 ஆயிரத்தில் இருந்து ரூ.10 லட்சத்து 34 ஆயிரத்து 700க்கு அதிரடி விலை குறைப்பு செய்யப்பட்டு உள்ளது.

இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி அடுக்குமாடி வீடு வாங்க விருப்பம் உள்ளவர்கள் வீட்டுவசதி வாரியத்தை அணுகி விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இத்தகவலை புதுவை வீட்டு வசதி வாரிய செயலர் குப்புசாமி தெரிவித்துள்ளார்.

Last Updated on Wednesday, 03 February 2010 11:12
 

வீட்டுவசதி வாரிய வீடுகளுக்கு அதிரடி விலை குறைப்பு

Print PDF

தினமணி 03.02.2010

வீட்டுவசதி வாரிய வீடுகளுக்கு அதிரடி விலை குறைப்பு

புதுச்சேரி, பிப். 2: புதுச்சேரியில் வீட்டுவசதி வாரிய அடுக்கு மாடி வீடுகளுக்கு அதிரடி விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக வீட்டுவசதி வாரியச் செயலர் செ.குப்புசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு விவரம்:

புதுச்சேரி வீட்டு வசதி வாரியம், சாரம் வருவாய் கிராமம், சுதந்திர பொன்விழா நகர் திட்டப் பகுதியில் கட்டப்பட்டுள்ள, ஒரு படுக்கை அறை கொண்ட அடுக்கு மாடி வீடுகளுக்கான தோராய விலை ரூ.15,25,000 என்று அறிவித்து விற்பனைக்கான விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்து வரவேற்கப்பட்டு 25-11-2010-ல் குலுக்கல் முறையில் பலருக்கு ஒதுக்கீடும் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஒதுக்கீடு பெற்றவர்கள் வீóட்டின் விலை அதிகமாக இருக்கிறது என்றும், அதை மறு பரிசீலனை செய்து, விலையை குறைத்து கொடுக்க புதுவை வீட்டு வசதி வாரியத் தலைவரை கேட்டுக்கொண்டனர்.வாரியத் தலைவரின் ஆணைப்படி, ஒரு படுக்கை அறை கொண்ட அடுக்கு மாடி வீட்டிற்கான தோராய விலை ரூ.10,34,700 என அதிரடி விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி அடுக்குமாடி வீடு வாங்க விருப்பமுள்ளவர்கள் வீட்டு வசதி வாரியத்தை அணுகி விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Last Updated on Wednesday, 03 February 2010 10:27
 

பெரம்பலூரில் 67 லட்சம் மதிப்பில் குடியிருப்பு மேம்பாடு: அமைச்சர்

Print PDF

தினமலர் 27.01.2010

பெரம்பலூரில் 67 லட்சம் மதிப்பில் குடியிருப்பு மேம்பாடு: அமைச்சர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் 67 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆதிதிராவிடர் நல குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தமிழரசி கூறினார். பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் மனிதநேய வார விழா நடந்தது. தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி துவக்கி வைத்து பேசியதாவது:

ஏழைகளின் எண்ணங்களை அறிந்து தமிழக முதல்வர், அருந்ததியருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு செய்து வாழ்க்கை தரம் உயர்த்தியுள்ளார். 56 பேர் மருத்துவ படிப்பும், ஆயிரத்து 156 பேர் இன்ஜினியரிங் படிப்பும் பயின்று வருகின்றனர். நல்ல சூழ்நிலையில் ஆதிதிராவிட மாணவர்கள் கல்வி பயில வேண்டும் என்று நபார்டு திட்டத்தின்கீழ் 50 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட விடுதி பராமரிப்புக்காக 35 லட்சம் ரூபாயும், ஐந்து விடுதி கட்ட இரண்டு கோடியே 60 லட்சம் ரூபாயும், சமுதாயக்கூடம் கட்ட பத்து லட்சம் ரூபாயும் மேலும் சில பணிகளுக்காக நான்கு கோடியே 40 லட்சம் ரூபாயும் பெற்று பணிகள் நடந்து வருகிறது.

நபார்டு திட்டத்தின்கீழ் 110 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் 67 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆதிதிராவிடர் நல குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். விழாவுக்கு கலெக்டர் விஜயகுமார் தலைமை வகித்தார். பெரம்பலூர் எம்.எல்.., ராஜ்குமார் முன்னிலை வகித்தார். விழாவில் டி.ஆர்.., பழனிசாமி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கொடியரசிதுரைசாமி, ஒன்றியக்குழு தலைவர் பெரியசாமி, குரும்பலூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் ரமணிராணி, செயல் அலுவலர் கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Wednesday, 27 January 2010 06:25
 


Page 49 of 69