Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

குடிசைவாழ் மக்கள் சங்க கூட்டம்

Print PDF

தினமணி 04.01.2010

குடிசைவாழ் மக்கள் சங்க கூட்டம்

பெங்களூர், ஜன.3: கர்நாடக மாநில குடிசைவாழ் மக்கள் சங்கம் சார்பில் பெங்களூர் மாவட்ட நகர்ப்புற குடிசைவாழ் மக்கள் சங்கக் கூட்டம் பெங்களூரில் திங்கள்கிழமை நடக்கிறது.

இந்த சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஜி. அங்கய்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாநிலத்தின் 14 மாவட்டங்களில் உள்ள குடிசைவாழ் மக்களை ஒருங்கிணைத்து அவர்களின் பிரச்னைகளை தீர்க்கவும், உரிமை, சமூகநீதி, சுயமரியாதை போன்றவற்றுக்காகவும் இந்த சங்கம் போராடி வருகிறது.

இந்நிலையில் பெங்களூர் நகர்ப்புற மாவட்ட குடிசைவாழ் மக்களின் கூட்டம் இன்ஃபான்டரி சாலையில் உள்ள இன்ஃபான்டரி திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை காலை 11.30 மணியளவில் கூட்டம் துவங்குகிறது.

முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதாதள தேசியத் தலைவருமான எச்.டி.தேவகெüடா கூட்டத்தை துவக்கிவைக்கிறார்.

மக்களவை உறுப்பினரும் ம.ஜ.தள மாநிலத் தலைவருமான எச்.டி.குமாரசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். சட்டப்பேரவை ம.ஜ.தள தலைவர் எச்.டி.ரேவண்ணா, ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள்.

Last Updated on Monday, 04 January 2010 09:44
 
குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு: அமைச்சர் ஆய்வு

Print PDF

தினமணி 31.12.2009

குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு: அமைச்சர் ஆய்வு

கோவை, டிச. 29: குடிசைவாசிகளுக்காக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் குடியிருப்பின் கட்டுமானப் பணிகளை ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.

புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் ரூ.29.43 கோடியில் 936 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்படுகிறது. அம்மன்குளம் ஏரிமேடு, வாலாங்குளம் பகுதியில் வசிக்கும் குடிசைவாசிகளுக்கு இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட உள்ளன.

குடிநீர், மின்வசதி, சாலை, கழிவுநீர்க் கால்வாய் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் இக் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

இப் பணிகளை நேரில் பார்வையிட்ட அமைச்சர் பழனிசாமி, வரும் ஜூன் மாதத்துக்கு முன்பு அனைத்து பணிகளையும் முடிக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். முன்னாள் எம்பி மு.ராமநாதன், குடிசை மாற்று வாரிய உதவி செயற்பொறியாளர் குமார் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Last Updated on Wednesday, 30 December 2009 10:30
 
Page 52 of 69