Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

குடிசை மேம்பாட்டு திட்டத்தில் பணி மானிய தொகை திரும்ப வழங்க கெடு

Print PDF

தினமலர் 30.12.2009

குடிசை மேம்பாட்டு திட்டத்தில் பணி மானிய தொகை திரும்ப வழங்க கெடு

நாமக்கல்: "குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மானிய தொகை பெற்று பணிகளை துவக்காத பயனாளிகள், மானிய தொகையை திருப்பி செலுத்த வேண்டும்' என, நகராட்சி கமிஷனர் ஆறுமுகம் கூறினார்.

தேசிய ஒருங்கிணைப்பு நகர குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட குடிசை பகுதியில் 440 வீடுகள் தேர்வு செய்யப் பட்டு, புதுப்பிக்கவும், விரிவுப்படுத்தவும் தலா 72 ஆயிரம் ரூபாய் வீதம் 3 கோடியே 16 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மானிய தொகை வழங்கப்பட்டது. அதில், 316 பேர் தங்களது வீடுகளை புதுப்பிக்கவும், விரிவுப்படுத்தும் பணியை துவங்கி உள்ளனர்.

மீதமுள்ள 124 பேர் எவ்வித பணியும் துவக்காமல் உள்ளனர். அவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. நகராட்சி கமிஷனர் ஆறுமுகம் தலைமை வகித்தார். கூட்டத்தில் பணி துவங்காததற்கான காரணம், அதில் உள்ள சிரமங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மானிய தொகையை பயன்படுத்த வேண்டும் என்றும், அவ்வாறு பயன்படுத்தவில்லை என்றால் தொகையை திருப்பி செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

மானிய தொகையை திருப்பி செலுத்தாத பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டனர். திருப்பி பெறப்படும் தொகையை வேறு பயனாளி தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது

Last Updated on Wednesday, 30 December 2009 07:07
 

குடிசை மாற்று வீடுகள்: பணியை துரிதமாக்க உத்தரவு

Print PDF

தினமலர் 30.12.2009

குடிசை மாற்று வீடுகள்: பணியை துரிதமாக்க உத்தரவு

கோவை : ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் அம்மன் குளம் பகுதியில் கட்டப்படும் வீடுகளை, ஊரகதொழில் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச் சர் நேற்று பார்வையிட்டார்.கோவை, அம்மன் குளம் பகுதியில், ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் 29.43 கோடி மதிப்பீட்டில் 936 வீடுகள், குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்படுகின்றன.

கட்டட பணிகளை நேற்று நேரில் பார்வையிட்ட ஊரகதொழில் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பழனிசாமி, கட்டடங்கள் தரமான முறையில் கட்டப்பட்டுள்ளதா, குடிநீர், மின்சாரம், தார்சாலை, சாக்கடை கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால் வசதிகள் சரிவர செய்யப் படுகிறதா, என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.அம்மன் குளம், ஏரிமேடு, வாலாங்குளம் போன்ற பகுதியில் வசிக்கும் குடிசை வாசிகள் இங்கு குடியமர்த்தப்பட உள்ளனர். உலகத்தமிழ் மாநாடு நெருங்கு வதையொட்டி பணிகளை விரைவு படுத்தி, 2010, ஜூனுக்குள் பணி களை முடிக்க வேண்டும், என அதிகாரிகளிடம் தெரிவித்தார்.முன்னாள் எம்.பி., ராமநாதன், குடிசை மாற்று வாரிய உதவி செயற் பொறியாளர் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Last Updated on Wednesday, 30 December 2009 06:49
 

குடிசை அபிவிருத்தி திட்டத்தில் 350 வீடுகள் கட்ட ரூ.3.73கோடி ஒதுக்கீடு

Print PDF

தினகரன் 29.12.2009

குடிசை அபிவிருத்தி திட்டத்தில் 350 வீடுகள் கட்ட ரூ.3.73கோடி ஒதுக்கீடு

சிவகங்கை : சிவகங்கை, காரைக்குடியில் குடிசை அபிவிருத்தி திட்டத்தில் 350 வீடுகள் கட்ட ரூ.3.73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை நகராட்சி: 2008&09ம் ஆண்டில் இயக்குதல் மற்றும் பராமரித்தல் உள்ள இடைவெளியை நிரப்பும் திட்டத்தின் கீழ் சிவகங்கை நகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டுவதற்காக ரூ.75லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2007&08ம் ஆண்டில் பின்தங்கிய பகுதி வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் ரூ.70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.54.02 லட்சம் மான்யமாகவும், ரூ.15.98 லட்சம் நகராட்சி வருவாய் நிதியிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 3பணிகள் எடுக்கப்பட்டு ஒரு பணி முடிக்கப்பட்டுள்ளது. மற்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. 2008&09ம் ஆண்டிற்கு ரூ.60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.54.02 லட்சம் மான்யமாகவும், ரூ.5.98 லட்சம் நகராட்சி வருவாய் நிதியிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 2பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

2008&09ம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த குடிசைப்பகுதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 5 குடிசைப்பகுதிகளில் 155 பேருக்கு வீடுகள் கட்டி கொள்ளும் பணிக்கு ரூ.165.85 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 22வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மற்ற கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன. 5 குடிசை பகுதிகளிலும் அடிப்படை வசதி மேற்கொள்ளும் பணிக்கு ரூ.124 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் 17பணிகள் தேர்வு செய்யப்பட்டு ஒரு பணி முடிவடைந்துள்ளது. மற்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

காரைக்குடி நகராட்சி:

காரைக்குடி நகராட்சியில் 2006&07ல் பகுதி 2 திட்டத்தில் ரூ.56 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ரூ.4.76 லட்சத்தில் 2006&07ல் 1071 நாய்களுக்கும், 2008&09ல் 113 நாய்களுக்கும் கருத்தடை செய்யப்பட்டுள்ளன. ரூ.13 லட்சத்தில் நவீன இறைச்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.80 லட்சத்தில் பூங்கா அபிவிருத்தி பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பின்தங்கிய பகுதிகளுக்கான வளர்ச்சிநிதி திட்டத்தின்கீழ் ரூ.116.32 லட்சத்தில் 3 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2008&09ல் ஒருங்கிணைந்த தேசிய குடிசை அபிவிருத்தி திட்டத்தில் 5 குடிசை பகுதிகளில் 195 வீடுகள் கட்ட ரூ.208.05 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதேபோல் ஒருங்கிணைந்த தேசிய குடிசை அபிவிருத்தி திட்டத்தில் 5 குடிசை பகுதிகளில் அடிப்படை வசதி மேற்கொள்ள ரூ.206.35 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Tuesday, 29 December 2009 11:48
 


Page 53 of 69