Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

தமிழகத்தில் முதல்முறையாக போடியில் வங்கிக் கடனுதவியுடன் குடிசை மேம்பாட்டுத் திட்டம் அமல்

Print PDF

தினமணி 23.12.2009

தமிழகத்தில் முதல்முறையாக போடியில் வங்கிக் கடனுதவியுடன் குடிசை மேம்பாட்டுத் திட்டம் அமல்

போடி, டிச.22: தமிழகத்தில் முதல் முறையாக போடியில் வங்கிக் கடனுதவியுடன் குடிசை மேம்பாட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

போடியில் குடிசைப் பகுதிகள் அதிகம் உள்ள 11 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒருங்கிணைந்த குடிசை மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பில் வீடுகட்ட நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்தத் தொகையில் ரூ.72 ஆயிரம் அரசு மானியமாக வழங்கப்படுகிறது. மீதித் தொகையைப் பயனாளிகள் செலுத்த வேண்டும்.

இந்த மானியத் தொகை கட்டடம் கட்டப்படும் நிலையைப் பொறுத்து 4 தவணைகளாக வழங்கப்படுகிறது. சில பயனாளிகளுக்கு தவணைத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நகர்மன்றக் கூடத்தில் நடைபெற்றது. தலைவர் ரதியா பானு தலைமை வகித்தார். கமிஷனர் சரவணக்குமார் முன்னிலை வகித்தார்.

இத்திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.18 ஆயிரம் வீதம் தவணைத் தொகையும், ஒரு பயனாளிக்கு ரூ.16 ஆயிரத்து 500 தவணைத் தொகையும், சென்ட்ரல் வங்கி மூலம் கடனுதவியாக 19 பயனாளிகளுக்கு ரூ.20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 4 லட்சத்து 50 ஆயிரத்து 500-க்கான காசோலைகளை எஸ்.லட்சுமணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் சங்கர், நகர திமுக செயலாளர் ரமேஷ், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

இத்திட்டம் குறித்து தினமணிக்கு அளித்த பேட்டியில் கமிஷனர் சரவணக்குமார் கூறியதாவது:

குடிசை வீடுகளில் வாழ்ந்து வரும் மக்களுக்கு இது பயனுள்ள திட்டமாகும். பயனாளி குறைந்தபட்டம் ரூ.35 ஆயிரம் வழங்கினால், அரசு மானியமாக ரூ.72 ஆயிரம் வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் போடி நகராட்சியில் 326 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

மேலும் அரசு நிர்ணயித்துள்ள ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பிற்கு மேல் அதிக மதிப்பில் வீடு கட்டுவதற்கு மிகக் குறைந்த வட்டியில் வங்கிக் கடன் பெற நகராட்சி நிர்வாகம் உதவுகிறது. இதற்காக ரூ.20 ஆயிரம் வரை வங்கிக் கடன் பெற்றுத் தரப்படுகிறது. இதனால் பல பயனாளிகள் தங்கள் குடிசை வீடுகளை மாற்றி அமைக்க முன் வருகின்றனர். இவ்வாறு அரசு மானியத்துடன் வங்கிக் கடனும் பெற்று வீடு கட்ட உதவுவது தமிழகத்தில் போடி நகராட்சியில்தான் முதல் முறை என்றார்.

 

குடிசைகள் மேம்பாட்டு திட்டத்தில் 45 பயனாளிகளுக்கு பணி உத்தரவு துணை மேயர் கார்த்திக் வழங்கினார்

Print PDF

மாலை மலர் 21.12.2009

குடிசைகள் மேம்பாட்டு திட்டத்தில் 45 பயனாளிகளுக்கு பணி உத்தரவு துணை மேயர் கார்த்திக் வழங்கினார்

கோவை மாநகர் பகுதியில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர குடிசைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 45 பயனாளிகளுக்கு பணி உத்தரவை துணை மேயர் கார்த்திக் வழங்கினார்.

ஜவஹர்லால் நேரு நகர புனரமைப்பு குடிசைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநகராட்சி 15-வது வார்டில் சொசைட்டி ஹாலில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பயனாளிகள் தேர்வு முகாம் நடந்தது.

முகாமின் போது, 45 பய னாளிகள் தேர்வு செய்யப் பட்டனர். பின்னர் 45 பேருக் கும் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்குவதற்கான பணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை 15-வது வட்டத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் துணை மேயர் நா.கார்த்திக் கலந்து கொண்டு 45 பயனாளிகளுக்கும் பணி உத்தரவை வழங்கினார்.

அப்போது கிழக்கு மண்டல தலைவர் எஸ்.எம். சாமி, கவுன்சிலர் ராமமூர்த்தி, வட்ட செயலாளர் போர்வாள் ராஜேந்திரன், இன்னாசி, கோபால்சாமி, ரத்தினம், மரிய ஜோசப், மாநகராட்சி உதவி பொறியாளர் ஹேமலதா, தொழில் நுட்ப உதவி யாளர் தியாகராஜன் மற்றும் 15-வது வட்ட தி.மு.. பிரமு கர்கள், தொண்டர்கள், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் திரளானபேர் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 21 December 2009 11:25
 

உக்கடம் குடிசை மாற்று வாரியத்தில் 354 வீடுகள் விரைவில் ஒப்படைப்பு

Print PDF

தினகரன் 21.12.2009

உக்கடம் குடிசை மாற்று வாரியத்தில் 354 வீடுகள் விரைவில் ஒப்படைப்பு

கோவை: உக்கடத்தில் குடிசை மாற்று வாரியத்தின் 354 வீடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை உக்கடம் வின்சென்ட் ரோட்டில் கடந்த ஆண்டு ஏஏ பிரிவில் இருந்த 3 அடுக்குமாடி அடியோடு சரிந்தது. இதில் 10 பேர் பரிதாபமாக இறந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து பழுதடைந்து காணப்பட்ட அனைத்து அடுக்குமாடி வீடுகளும் அதிரடியாக இடித்து தரைமாட்டமாக்கப்பட்டது. குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 13.75 கோடி ரூபாய் செலவில் மீண்டும் அதே இடத்தில் அடுக்குமாடி வீடு கட்டும் பணி துவங்கியது. தற்போது கட்டுமான பணிகள் 95 சதவீதத்தை எட்டியுள்ளது. பெரும்பாலான கட்டடங்களில் மேற்கூரை மற்றும் பூச்சு பணிகள் நடக்கிறது. வெளிப்பூச்சு பணி விரைவாக முடியும் நிலையில் இருக்கிறது. ஒரு மாதத்தில் அனைத்து பணிகளும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணி முடிந்ததும், இப்பகுதியில் ஏற்கனவே குடியிருந்தவர்களுக்கு வீடுகள் ஒப்படைக்கப்படும். புதிய கட்டடத்திற்கு பின்பகுதியில் வாலாங்குள வாய்க்கால் உள்ளது.

354 வீடுகளின் கழிவு நீரும் இந்த குளத்து வாய்க்காலில் தான் விடப்படும். நகரின் தெற்கு பகுதியில் உள்ள சாக்கடை கழிவு நீர் இந்த கால்வாயில் திருப்பி விடப்பட்டுள்ளது. தனி சாக்கடை கால்வாய் அமைத்து, உக்கடம் கழிவு பண்ணை வளாகத்திற்கு கழிவு நீரை திருப்பி விட ஏற்பாடு செய்தால் பிரச்னை இருக்காது.

Last Updated on Monday, 21 December 2009 09:18
 


Page 55 of 69