Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

9 பேரூராட்சிகளில் ரூ.2.70 கோடி மதிப்பில் 225 குடிசைகள் மேம்பாடு

Print PDF
தினமணி 11.12.2009

9 பேரூராட்சிகளில் ரூ.2.70 கோடி மதிப்பில் 225 குடிசைகள் மேம்பாடு

திருப்பூர், டிச.10: தேசிய குடிசைப்பகுதி புனரமைப்பு திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்திலுள்ள 9 பேரூராட்சிகளில் ரூ.2.70 கோடி மதிப்பில் 225 குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மேம்படுத்தப்பட உள்ளன. பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலகம் மூலம் இதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

குடிசைப்பகுதிகளில் வாழும் மக்கள் மேம்பாட்டுக்காக தேசிய குடிசைப்பகுதி புனரமைப்பு திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பேரூராட்சியிலும் தலா 25 குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மேம்படுத்தித்தரப்படும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் 2009-10ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிóக்கப்பட்டது.

அதன்படி, திருப்பூர் மாவட்டத்திலுள்ள 17 பேரூராட்சிகளில் இந்த ஆண்டு அவிநாசி, கொளத்துப்பாளையம், குன்னத்தூர், மூலனூர், மடத்துக்குளம், முத்தூர், சங்கராமநல்லூர், சின்னக்காம்பாளையம் மற்றும் கொமரலிங்கம் ஆகிய 9 பேரூராட்சி களில் தலா ரூ.1.20 லட்சம் மதிப்பில் 225 குடிசை வீடுகள் ரூ.2.60 கோடி மதிப்பில் கான்கீரிட் வீடுகளாக மேம்படுத்தப்பட உள்ளன.

தவிர, அக்குடிசைகள் அமைந்துள்ள பகுதிகளில் ரூ.2.70 கோடி மதிப்பில் சாலை, கழிப்பிடம், குடிநீர் தொட்டிகள் உள்ளிட்ட அவசியமான 72 அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவும் உள்ளன. இத்திட்டத்துக்கான நிர்வாக அனுமதி வேண்டி திருப்பூர் மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம் மூலம் கருத்துருக்கள் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டு ள்ளன. இதற்கான உத்தரவு கிடைத்தவுடன் 9 பேரூராட்சிகளிலும் பணிகள் மேற்கொ ள்ளப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி.சமயமூர்த்தி தெரிவித்தார்.

 

5 ஆண்டுகளில் குடிசைகளற்ற இந்தியா: மத்திய அரசு தகவல்

Print PDF

தினமணி 04.12.2009

5 ஆண்டுகளில் குடிசைகளற்ற இந்தியா: மத்திய அரசு தகவல்

புது தில்லி, டிச.3: அடுத்த 5 ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்காக நகர்ப்புறங்களில் குடிசைகளில் வாழும் ஏழைகளுக்கு வீடுகட்டித் தரும் திட்டத்தை மத்திய அரசு விரைந்து செயல்படுத்தவுள்ளது.

நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை இணை அமைச்சர் செüகத் ராய் பதிலளிக்கையில் கூறியதாவது:

நகர்ப்புறங்களில் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில் அவர்களுக்கு வீடு கட்டித் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களில் மக்கள்தொகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 1993-1994 முதல் 2004-2005ம் ஆண்டு கால இடைவெளியில் 7 கோடியே 63 லட்சமாக இருந்த மக்கள்தொகை 8 கோடியே 8 லட்சமாக அதிகரித்துள்ளது.

கிராமப்புறங்களில் வாழும் மக்கள் நகர்ப்புறங்களில் குடியேறுவதே, நகர்ப்புறங்களில் மக்கள்தொகை அதிகரிப்பதற்கு காரணமாகும் என்றார் அமைச்சர் செüகத் ராய்.

 

மானிய வட்டியில் வீடு கட்ட கடன்

Print PDF

தினமணி 20.11.2009

மானிய வட்டியில் வீடு கட்ட கடன்

விருதுநகர், நவ.19: விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள ஏழை எளியோருக்கு மானிய வட்டியில் வீடு கட்ட கடனுதவி அளிóக்கும் திட்டம் குறித்து மதுரை எல்லீஸ்நகரில் உள்ள வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளரை நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர்.அய்யம்பெருமாள் (94431 77348) என்ற எண், இளநிலைப் பொறியாளர் வி.அங்கமுத்து (99656 77007) என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என ஆட்சியர் சிஜி தாமஸ் வைத்யன் கேட்டுக் கொண்டுள்ளார்.

 


Page 57 of 69