Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

நகரம், பேரூராட்சி பகுதிக்கும் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் கீற்று உற்பத்தியாளர் சங்கம் வலியுறுத்தல்

Print PDF

தினகரன்               15.11.2010

நகரம், பேரூராட்சி பகுதிக்கும் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் கீற்று உற்பத்தியாளர் சங்கம் வலியுறுத்தல்

மயிலாடுதுறை, நவ.15: கலைஞர் வீடுகட்டும் திட்டத்தை நகர பேரூராட்சி பகுதிகளிலும் விரிவுபடுத்த கீற்று உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மயிலாடுதுறை பொதுதொழிலாளர் சங்கத்தின் ஓர் அங்கமான கீற்று உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் சங்க அலுவலகத்தில் சங்க தலைவர் நாஞ்சில்சேகர் தலைமையில் நடைபெற்றது.

செயலாளர் பாண்டியன் வரவேற்றுப் பேசினார். பொருளாளர் பாலு, துணைத்தலைவர் விஸ்வநாதன், தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஜெகவீரபாண்டியன் சிறப்புரையாற்றினார்.

பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் அப்பர்சுந்தரம், தென்றல் கோவிந்தராஜ், சாமிநாதன், குருசங்கர், கீற்று உற்பத்தி யாளர் சங்கத்தின் சின்னகுஞ்சு, கோவிந்தராஜ், ரேவதி, விஜயா, பரமசிவம், பாலு, சுந்தரமூர்த்தி, கல்யாணம் உள்ளிட்டோர் பேசினர்.

குடிசைஇல்லா தமிழகம் என்ற இலக்குடன் தொடங்கப்பட்டுள்ள கலைஞர் வீடுகட்டும் திட்டத்தை தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தும் தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கம் நன்றி, கலைஞர் வீட்டு வசதி திட்டத்தை நகரம் மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும், மத்திய அரசின் திட்டமான 100 நாள் வேலை திட்டத்தையும், நகர புறத்திற்கும் விரிவுபடுத்த மத்திய அரசை கேட்டுக்கொள்வது, மயிலாடுதுறை கீற்று உற்பத்தியாளர்கள் வகிக்கும் கீழநாஞ்சில்நாட்டில் உள்ள மினிபவர் பம்பு சுகாதார வளாகம் ஆகியவை செயல்படவில்லை. உடனடியாக நகராட்சி நிர்வாகம் சரி செய்ய கேட்டுக்கொள்வது, கீழநாஞ்சில்நாட்டில் உள்ள குளத்திற்கு ரிவிட்மென்ட் அமைத்துத்தரவும், குளத்திலுள்ள வெங்காயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும்.

இப்பகுதியில் உள்ளவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏகாம்பரம் நன்றி கூறினார்.

 

குடிசை மாற்று வாரியத்தின் 2232 வீடுகள் விரைவில் திறப்பு ரூ3.06 கோடியில் மின் வசதி

Print PDF

தினகரன்                 15.11.2010

குடிசை மாற்று வாரியத்தின் 2232 வீடுகள் விரைவில் திறப்பு ரூ3.06 கோடியில் மின் வசதி

கோவை, நவ. 15: கோவையில் குடிசை மாற்று வாரியத்தின் 2232 வீடுகளை விரைவில் திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மின் வசதி செய்ய 3.06 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 54 கோடி ரூபாய் செலவில் உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகத்தில் 2232 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. தற்போது இறுதி கட்ட பூச்சு மற்றும் மேற்கூரை அமைக்கும் பணி நடக்கிறது.

2050 வீடுகள் முழு அளவில் கட்டி முடிக்கப் பட்டுள்ளது. பணி முடிந்த வீடுகளுக்கு மின் இணை ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. குடியிருப்பு வளாகத்தில் டிரான்ஸ்பார்மர், மின்சார பிட்டிங் மற்றும் ஒயர் இணைப்பு வசதி ஏற்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக 3.06 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் 19ம் தேதி இதற்கான டெண்டர் இறுதி செய்யப்படும். ஓரிரு மாதத்திற்குள் மின் இணைப்பு வசதி செய்து முடிக்கப்படும். அதற்கு பின்னர், குடியிருப்புகளை திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கோவை நகரில், குடிசை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இந்த குடியிருப்புகள் ஒதுக்கப்படும். குறிப்பாக, ஏற்கனவே குடிசை மாற்று வாரியத்தின் பழுதடைந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கு இந்த வீடுகள் முன்னுரிமை அடிப்படையில் ஒப்படைக்கப்படும்.

குளம், ஆட்சேபகர நீர் நிலையில் வசிப்போர்களில் சிலருக்கும் இந்த குடியிருப்புகளில் வீடு ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

வீடு கட்ட கடன் வழங்கும் திட்டம் புளியங்குடி நகராட்சியில் இன்று சிறப்பு முகாம்

Print PDF

தினகரன்              02.11.2010

வீடு கட்ட கடன் வழங்கும் திட்டம் புளியங்குடி நகராட்சியில் இன்று சிறப்பு முகாம்

புளியங்குடி,நவ.2: புளியங்குடி நகராட்சிப்பகுதியில் வீடு கட்டுவதற்கான கடன் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்கள் வழங்காதவர்கள் இன்று (2ம் தேதி) நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் சிறப்புமுகாமில் பங்கேற்குமாறு ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து புளியங்குடி நகராட்சி ஆணையாளர் செந்தில்முருகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

புளியங்குடி நகராட்சி பகுதியில் மத்திய அரசின் நகர்ப்புற வீடு கட்ட கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக கடந்தமாதம் 5ந் தேதி புளியங்குடியில் கலெக்டர் ஜெயராமன் தலைமையில் பொதுமக்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவ்விண்ணப்பங்களில் பெரும்பாலானவை புகைப்படம் ஒட்டப்படாமலும், கையொப்பம் இல்லாமலும், உரிய ஆவணங்கள் இணைக்கப்படாமலும் உள்ளன.

இதுதொடர்பாக இன்று நகராட்சி அலுவலகத்தில் சிறப்புமுகாம் நடைபெறுகிறது.

காலை 10மணி முதல் மாலை 5 மணி வரை நடக் கும் இம்முகாமில் சிவகிரி தாசில்தார் ராஜாராம், சார்பதிவாளர் (பொறுப்பு) கணேசன்ஆகியோர் பங் கேற்கின்றனர். எனவே, வீடு கட்ட கடன் கேட்டு விண்ணப்பத்துள்ளவர்கள் போ திய ஆவணங்களுடன் இம்முகாமில் பங்கேற்கலாம்

 


Page 22 of 69