Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தில்பயனாளிகளுக்கு ரூ.26.92 லட்சம் நிதி:மேயர் ஏ.எல்.எஸ்., வழங்கல்

Print PDF

தினமலர் 29.09.2010

குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தில்பயனாளிகளுக்கு ரூ.26.92 லட்சம் நிதி:மேயர் ஏ.எல்.எஸ்., வழங்கல்

திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சியில் குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 167 பயனாளிகளுக்கு ரூ.26.92 லட்சத்தினை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் வழங்கினார்.நெல்லை மாநகராட்சி ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தச்சநல்லூர் மண்டலத்தில் 33 பயனாளிகள், பாளை., மண்டலத்தில் 104 பயனாளிகள், நெல்லை மண்டலத்தில் 30 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கும், வீடு மேம்பாட்டு பணிகளுக்காகவும் மானியத் தொகை ரூ.26.92 லட்சத்தினை பயனாளிகளுக்கு மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் வழங்கினார். இதில் துணைமேயர் முத்துராமலிங்கம், கமிஷனர் சுப்பையன், மண்டல சேர்மன் விஸ்வநாதன், கவுன்சிலர்கள் வெங்கடேசன், நமச்சிவாயம், துரை, அப்துல்வகாப், கோபி, பேபிகோபால், உதவிக்கமிஷனர் சுல்தானா உட்பட பலர் கலந்து கொண்டனர்

 

குடிசை மேம்பாடு திட்டத்தின் கீழ் 167 பேருக்கு நிதியுதவி

Print PDF

தினகரன் 29.09.2010

குடிசை மேம்பாடு திட்டத்தின் கீழ் 167 பேருக்கு நிதியுதவி

நெல்லை, செப்.29: ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 167 பயனாளிளுக்கு நேற்று நெல்லை மாநகராட்சியில் நிதியுதவி வழங்கப்பட்டது. தச்சை மண்டலத்தில் 33 பயனாளிகளுக்கும், பாளை மண்டலத்தில் 104 பயனாளிகளுக்கும், நெல்லை மண்டலத்தில் 30 பயனாளிகளுக்கும் புதிய வீடு கட்டி தரவும், வீடுகளை மேம்படுத்தவும் மானிய தொகையாக ரூ.26 லட்சத்து 92 ஆயிரம் வழங்கப்பட்டது.

மேயர் சுப்பிரமணியன் நிதியுதவியை அளித் தார். துணை மேயர் முத்துராமலிங்கம், கமிஷனர் சுப்பை யன், மண்டல தலைவர் விஸ்வநாத பாண்டியன், கவுன்சிலர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண் டனர். மொத்தம் 167 பயனாளிகள் நிதியுதவிக்கான காசோலைகளை பெற்ற னர்.

நெல்லையில் ஒருங்கிணைந்த குடிசை மேம்பாடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உதவித்தொகையை மேயர் சுப்பிரமணியன் வழங்கினார். அருகில் துணைமேயர் முத்துராமலிங்கம், மண்டல தலைவர் விஸ்வநாதபாண்டியன், கமிஷனர் சுப்பையன்.

 

ஓகலிபுரம் குடிசைப் பகுதி மக்களுக்கு வீடுகள்: திட்டத்துக்கு எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

Print PDF

தினமணி 08.09.2010

ஓகலிபுரம் குடிசைப் பகுதி மக்களுக்கு வீடுகள்: திட்டத்துக்கு எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

பெங்களூர், செப்.7: ஓகலிபுரம் வார்டில் குடிசைப் பகுதி மக்களக்கு ரூ.2.52 கோடி செலவில் 84 வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினர் தினேஷ் குண்டுராவ் அடிக்கல் நாட்டினார்.

பெங்களூர் காந்தி நகர் சட்டப்பேரவை தொகுதியில் அடங்கிய ஓகலிபுரம் வார்டில் குடிசைப் பகுதி மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க அந்த வார்டு கவுன்சிலர் குயின் எலிசபத் நடவடிக்கை எடுத்தார். மாநகராட்சி சார்பில் ஓகலிபுரம் 5-வது மெயின் உள்ள 84 குடிசை வீடுகளுக்குப் பதில் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட உள்ளன.

ஒவ்வொரு வீடும் தலா ரூ.3 லட்சம் செலவில் கட்டப்படுகிறது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடந்தது. தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தினேஷ்குண்டுராவ் இதில் கலந்து கொண்டு வீடு கட்டும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் கவுன்சிலர் குயின் எலிசபத், முன்னாள் கவுன்சிலர் டிஜேசி சக்கரவர்த்தி, காங்கிரஸ் பிரமுகர் காந்தி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இத்திட்டம் குறித்து கவுன்சிலர் குயின் எலிசபத் கூறியதாவது:

இப்பகுதியில் உள்ள குடிசை வீடுகளுக்குப் பதிலாக கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளன. ஒவ்வொரு வீடும் தலா ரூ.3 லட்சம் செலவில் மொத்தம் ரூ.2.52 கோடி செலவில் 84 வீடுகள் கட்டப்படவுள்ளன என்றார் அவர்.

 


Page 25 of 69