Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

தேனியில் குடிசை மாற்று வாரிய வீடுகட்டும் திட்டம்

Print PDF

தினமலர் 26.08.2010

தேனியில் குடிசை மாற்று வாரிய வீடுகட்டும் திட்டம்

தேனி:தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் நகர்ப்புற ஏழை மக்களுக்கு மானியத்துடன் கூடிய வட்டியில் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப் பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் தகர வீடு, ஓலை வீடு, ஓட்டு வீடுகளில் வசிக்கும் ஏழைகளும், காலி மனை வைத் துள்ளவர்களும் கான்கிரீட் வீடு கட்ட கடன் வழங்கப் படுகிறது. 270 சதுர அடி வரை ஒரு லட்சம் ரூபாயும், 400 சதுர அடி வரை ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும் கடன் வழங்கப்படுகிறது.

15 முதல் 20 ஆண்டுகளில் கடனை திருப்பி செலுத்த வேண்டும். விண் ணப்பிக்க விரும்புவோர் இடத்திற்கான பட்டா அல்லது பத்திரம், வருமானச்சான்றுடன்(ஒரு லட்சம் கடனுக்கு 50 முதல் 60 ஆயிரம் வரை ஆண்டு வருமானம் இருக்க வேண்டும், 1.60 லட்சம் வரை கடன் பெறுவோருக்கு ஆண்டு வருமானம் ஒரு லட்சம் இருக்க வேண்டும்) மதுரையில் உள்ள குடிசை மாற்று அலுவலகத்துக்கு விண்ணப் பிக்கலாம். தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம். கடன் வட்டி ஒன்பது சதவீதத்தில் ஐந்து சதவீதம் வட்டியை அரசே ஏற்கும். மீதமுள்ள நான்கு சதவீதம் வட்டியை கடன் பெற் றோர் கட்ட வேண் டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர நகராட்சி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


Last Updated on Friday, 27 August 2010 05:14
 

எம்.எம்.ஆர்.டி.ஏ.கட்டும் வீடுகளுக்கு அடிப்படை வசதி செய்து தர மாநகராட்சி சம்மதம்

Print PDF

தினகரன் 25.08.2010

எம்.எம்.ஆர்.டி..கட்டும் வீடுகளுக்கு அடிப்படை வசதி செய்து தர மாநகராட்சி சம்மதம்

மும்பை,ஆக.25: மும்பையில் திட்டப்பணிகளால் பாதிக்கப்பட்ட குடிசைவாசிகளுக்கு எம்.எம்.ஆர்.டி..கட்டும் வீடுகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாநகராட்சி சம்மதித்துள்ளது.

மும்பையில் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு திட்டப்பணிகளால் ஏராளமான குடிசைவாசிகள் தங்களது வீடுகளை இழக்க நேரிடுகிறது. அவ்வாறு வீடுகளை இழப்பவர்களுக்கு எம்.எம்.ஆர்.டி.. வேறு இடத்தில் வீடுகளை கட்டிக்கொடுக்கிறது. இந்த வீடுகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மறுத்து வந்தது.

ஏற்கனவே மஹாடா கட்டிய வீடுகளில் குப்பைகளை அகற்றுதல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல் போன்ற வசதிகளை செய்து கொடுக்க மாநகராட்சி மறுத்தது. இதையடுத்து இப்பிரச்னை குறித்து எம்.எம்.ஆர்.டி..கமிஷனர் ரத்னாகர் மும்பை மாநகராட்சி கமிஷனர் ஷத்தியாவை சந்தித்து பேசினார். இதில் எம்.எம்.ஆர்.டி..கட்டும் கட்டிடங்களை தங்களது அதிகாரிகள் சோதனை செய்த பிறகு குடிநீர், கழிவுநீர்கால்வாய் வசதி, குப்பைகள் அகற்றுதல் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருவதாக ஷத்திரியா உறுதியளித்துள்ளார்.

 

திருப்பதியை குடிசை இல்லாத நகரமாக மாற்ற ஹி2,223 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு

Print PDF

தினகரன் 13.08.2010

திருப்பதியை குடிசை இல்லாத நகரமாக மாற்ற ஹி2,223 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு

திருப்பதி, ஆக.13: திருப்பதியை குடிசை இல்லாத நகரமாக மாற்ற மத்திய அரசு க்ஷீ2,223 கோடி ஒதுக்கி உள்ளதாக ஆந்திர மாநில ராஜிவ் ஆவாஸ் யோஜனா திட்ட அதிகாரி அபர்ணா தாஸ் தெரிவித்தார்.

திருப்பதி நகர வளர்ச்சி அலுவலகத்தில் நகராட்சி கமிஷனர் ஜானகி தலைமையில் ராஜூவ் ஆவாஸ் யோஜனா திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஆந்திர மாநில ராஜிவ் ஆவாஸ் யோஜனா திட்ட அதிகாரி அபர்ணா தாஸ் கலந்து கொண்டு பேசியது:

குடிசைகள், ஷெட்டுகள் இல்லாத நவீன நகரமாக திருப்பதியை மாற்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி நவீன முறையில் புதிய கட்டிடங்கள் கட்ட ராஜிவ் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் க்ஷீ2,223 கோடியை மத்திய அரசு திருப்பதிக்கு ஒதுக்கியுள்ளது. அதன்படி முதற்கட்டமாக நேற்று க்ஷீ139 கோடி வந்துள்ளது.

இந்த நிதி மூலம் புதிய கட்டிடங்கள், சாலை, குடிநீர் வசதிகள், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்டவைகள் செய்து முடிக்கப்படும். இதற்காக குடிசைப்பகுதிகளில் வாழும் குடும்பங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பு நடத்த பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் குடிசை வீடுகளில் வாழும் 13 ஆயிரம் குடும்பத்தினரை சந்தித்து பேசியுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் நகர வளர்ச்சி அலுவலக துணைத் தலைவர் பென்சல் ரெட்டி, நகராட்சி இணை கமிஷனர் கொண்டல் ராவ் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 


Page 27 of 69