Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

குடிசை மாற்றுவாரியம் மூலம் வீடுகள்

Print PDF

தினமலர் 12.08.2010

குடிசை மாற்றுவாரியம் மூலம் வீடுகள்

முதுகுளத்தூர்: ""முதுகுளத்தூர் பேரூராட்சி முதல் வார்டில் புறம்போக்கு இடங்களில் வசிக்கும் மக்களுக்கு, பேரூராட்சி சார்பில் இடம் கொடுத் தால், குடிசை மாற்று வாரியம் மூலம் இலவச வீடுகள் கட்டி தரப் படும்,''என, அமைச்சர் தங்கவேலன் கூறினார்.

முதுகுளத்தூரில் நடந்த விழாவில் பயனாளிக ளுக்கான இலவச "டிவி'க் களை வழங்கி அவர் பேசியதாவது: குடிசை மாற்று வாரியத்துறைக்கு ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யபட்டு வருகிறது. இந்த நிதியால் குடிசை மாற்றுவாரிய வீடுகள் அமைந்துள்ள பகுதிகளுக்கு, தரமாக ரோடுகள் கூட அமைக்க முடியவில்லை. இதனால் குடிசை மாற்றுவாரியம் பணக்கார வீட்டில் கட்டி கொடுத்த ஏழைவீட்டு பெண் போல் உள்ளது. பெயருக்கு தான் அமைச்சர், துறை எல் லாம். இருப்பினும் மக்க ளின் சேவைக்காக தெருக் கள் தோறும் பணியாற்றி, குறைகளை களைந்து வருகிறேன், என்றார்.

முருகவேல்எம்.எல்,., முன்னிலை வகித்தார். தாசில்தார் பிச்சை வரவேற்றார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரவிச்சந்திராமவன்னி, ஒன் றிய தலைவர்கள் ஈஸ்வரி (முதுகுளத்தூர்) , ராஜ சேகர் (கடலாடி) பேரூ ராட்சி தலைவர் சசிவர்ணம், துணைத் தலைவர் ஷாஜகான் , மாவட்ட தி.மு.., துணை செயலாளர் கருப்பையா, ஒன்றிய செயலாளர் முனியசாமி, மாவட்ட கவுன்சிலர் முத்து ராமலிங்கம், பேரூராட்சி கவுன்சிலர்கள் சாரதா, சேகர், கணேசன், ஒன்றிய கவு ன்சிலர் திருமூர்த்தி, மாவட்ட காங்., செய லாளர் முனியசாமி உட் பட பலர் கலந்து கொண் டனர். செயல் அலுவலர் முனியாண்டி நன்றி கூறினார்.

 

பெங்களூரில் 15 லட்சம் குடிசைவாசி அமைச்சர் தகவல்

Print PDF

தினகரன் 09.08.2010

பெங்களூரில் 15 லட்சம் குடிசைவாசி அமைச்சர் தகவல்

பெங்களூர், ஆக.9: பெங்களூரில் 570 குடிசைப்பகுதிகள் உள்ளன. இவற்றில் 15லட்சம்பேர் வசித்துவருகின்றனர் என்று அமைச்சர் கட்டா சுப்ரமண்ய நாயுடு தெரிவித்தார்.

லக்கரேயில் 65 குடியிருப்புகளை துவக்கிவைத்து அவர் பேசியதாவது: பெங்களூரில் 570 குடிசை பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 15 லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் 2,704 குடிசைப்பகுதிகள் உள்ளன. இதில் 2000 குடிசைப்பகுதிகள் அரசு நிலங்களில் அமைந்துள்ளன. நகர ஏழைகளுக்கு மேலும் நிறைய வீடுகளை கட்டித்தர அரசு விரும்புகிறது. மேலும் வசிப்பிட சான்றிதழும் அவர்களுக்கு வழங்க இருக்கிறது.

குடிசையில்லா நகரம், மற்றும் மாநிலம் என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு நிதி பங்கு அளிக்க மாநில அரசு தயாராக இருக்கிறது. ராஜிவ் ஆச்சரே திட்டத்தின் கீழ் நிலத்தின் உரிமை பெண்கள் மீது பதிந்து தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

 

மாவட்டம் தோறும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு இடம் தேர்வு ரூ.300 கோடியில் கட்டப்படுகிறது

Print PDF

தினகரன் 27.07.2010

மாவட்டம் தோறும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு இடம் தேர்வு ரூ.300 கோடியில் கட்டப்படுகிறது

திருச்சி, ஜூலை 27: தமிழகத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்ட மாவட்டந்தோறும் இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடியில் மட்டும் இடம் முடிவாகியுள்ளது.

ஏரி, ஆறு, குளம், வாய்க்கால், சாலையோரம் போன்ற ஆட்சேபனைக்குரிய, அரசுக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்போருக்கு, அரசு சார்பில் மாற்று இடங்களில் குடியிருப்பு ஏற்படுத்தி தரும் பணியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் 2010&2015 வரையிலான காலத்தில் தமிழகத்தில் ரூ.300 கோடி மதிப்பில் அடுக்கு மாடி குடியிருப்புகளை ஏற்படுத்த 13வது நிதிக்குழு முடிவு செய்து நிதி ஒதுக்கியுள்ளது.

இதையடுத்து தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை அமைப்பதற்கான முதற்கட்ட பணி தற்போது துவங்கியுள்ளது. திருச்சி கோட்டத்திலுள்ள திருச்சி, புதுக் கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள குடிசை குடியிருப்பு விபரம், அதற்கு மாற்றாக தேவைப்படும் குடியிருப்புகளின் எண்ணிக்கை போன்ற விபரங்கள் சேகரிப்பு மற்றும் குடியிருப்பு கட்டுவதற்கான இடம் தேர்வு பணியை அந்தந்த மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மச்சுவாடி என்ற பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்து, அதுபற்றிய விபரத்தை அம்மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திடம் அளித்துள்ளது.

மற்ற மாவட்டங்களில் இப்பணி தீவிரமாக நடக்கிறது. ஓரிரு வாரத்தில் பணி முடிந்து விடும் என்று தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 28 of 69