Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

துப்புரவு ஊழியர்களுக்கு ரூ.75 லட்சத்தில் குடியிருப்பு

Print PDF

தினகரன் 14.06.2010

துப்புரவு ஊழியர்களுக்கு ரூ.75 லட்சத்தில் குடியிருப்பு

ஈரோடு, ஜூன் 14:ஈரோடு மாநகராட்சியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவானந்தம் ரோட் டில் துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு கட்டப்பட்டது. 50 ஆண்டு ஆன தால் கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதற்காக துப்புரவு பணியாளர்களுக்கு புதிதாக குடியிருப்பு கட்டித் தர மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.

இங்கு வசித்து வரும் துப்புரவு பணியாளர்களுக்கு 400 சதுர அடி பரப்பளவில் புதியதாக குடியிருப்பு கட்டப்படவுள்ளது. தற்போதுள்ள பழைய குடியிருப்பு கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு இதே இடத்தில் புதிதாக 12 குடியிருப்புகள் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக இடை வெளி நிரப்புதல் திட்ட நிதி மற்றும் மாநகராட்சி நிதி மூலம் ரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விரைவில் பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளதால் ஏற்கனவே இங்கு வசித்து வரும் துப்புரவு பணியாளர்களுக்கு புதிய கட்டிடம் கட்டும் வரை மாற்று இருப்பிட வசதி ஏற்படுத்தி தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான ஹெம்மிங்வே மார்க்கெட் வணிக வளாக கட்டிடத்தின் தரை தளத்தில் காலியாக உள்ள இடத்தில் தடுப்புகள் அமைத்து துப்புரவு பணியாளர்களுக்கென தற்காலிக குடியிருப்புகள், குடிநீர் வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.முதற்கட்டமாக துப்புரவு பணியாளர் களுக்கு தற் காலிக குடியிருப்பு அமைத்து கொடுத்த பிறகு புதிய குடியிருப்பு பணிகள் தொடங் கும். இந்த ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

மாநகராட்சி குடிசைப் பகுதிகளில்அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட ஆய்வு

Print PDF

தினமணி 13.06.2010

மாநகராட்சி குடிசைப் பகுதிகளில்அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட ஆய்வு

திருச்சி, ஜூன் 12: திருச்சி மாநகராட்சி குடிசைப் பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்கான இடத்தை மேயர் மற்றும் ஆணையர் சனிக்கிழûமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில், திருச்சி மாநகராட்சியில் உள்ள குடிசைப் பகுதிகளில் பல ஆண்டுகளாக வசித்து வரும் பொதுமக்களுக்கு அரசு மானிய உதவியுடன், அனைத்து அடிப்படை வசதிகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டித் தரப்பட உள்ளன.

இதன்படி அரியமங்கலம் கோட்டம், 19 -வது வார்டுக்குள்பட்ட ஜெயில்பேட்டையில் மதுரை சாலைக்கும்- துணை சிறைக்கும் இடையே அமைந்துள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் ஒரு பகுதியில் 2.47 ஏக்கர் பரப்பளவில் அனைத்து அடிப்படை வசதிகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கான முதல் கட்டப் பணிகள் நடைபெற உள்ளன.

அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டடப்பட உள்ள இடத்தை மாநகராட்சி மேயர் எஸ். சுஜாதா, ஆணையர் த.தி. பால்சாமி ஆகியோர் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது செயற்பொறியாளர்கள் ஆர். சந்திரன், எஸ். அருணாசலம், மாநகராட்சி உறுப்பினர் எம். முகமது முஸ்தபா, தமிழ்நாடு குடிசை மாற்றுவாரிய உதவிச் செயற்பொறியாளர் ஆர். ஜயபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

நெல்லையில் வீட்டுமனைகளுக்கான நிலம் மாநகராட்சிக்கு தான பத்திரம் ஒப்படைப்பு

Print PDF

தினமலர் 11.06.2010

நெல்லையில் வீட்டுமனைகளுக்கான நிலம் மாநகராட்சிக்கு தான பத்திரம் ஒப்படைப்பு

திருநெல்வேலி : நெல்லையில் அரசு உத்தரவுக்கு புறம்பாக வீட்டுமனைகளுக்கான நிலம் மாநகராட்சிக்கு தானம் பத்திரம் ஒப்படைப்பு செய்யப்பட்ட விவகாரத்தில் ரூ.2 கோடி வரை நிதியிழப்பு ஏற்பட்டுள்ளதாக கமிஷனரிடம் காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் சுடலைக்கண்ணு புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் அலுவலகத்திற்குட்பட்ட சத்திரம் புதுக்குளம் கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட வீட்டுமனைப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மனைப்பிரிவுகளுக்கு தெருவிளக்கு கட்டணம், ரோடு வசதி, வடிகால் வசதி, கச்சா வடிகால் வசதி, பூங்கா மற்றும் குடிநீர் வசதிக்கான கட்டணம் செலுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய கட்டணத்தை செலுத்தாமல் சென்னை ஊரமைப்பு துறை இயக்குனருக்கு மனைப்பிரிவுக்கு ஒப்புதல் பெற வேண்டி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித்துறை வளர்ச்சிக்கான கட்டணங்களை செலுத்தி அனுமதி பெற்று மனைப்பிரிவுகளுக்கு அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என ஊரமைப்புத்துறை இயக்குனரிடம் இருந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவு வந்துள்ளது. இந்நிலையில் உள்ளாட்சித்துறை வளர்ச்சித்துறை கட்டணங்களை வசூலிக்காமல் நெல்லை மாநகராட்சிக்கு நில ஒப்படைப்பு தான பத்திரம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகராட்சிக்கு வரவேண்டிய தெருவிளக்கு கட்டணம் ரூ.22 லட்சமும், பாதாள சாக்கடை பைப்புத் தொகை ரூ.6.66 லட்சமும், மெட்டல் ரோடு அமைக்க ரூ.1.48 கோடியும், குடிநீர் குழாய் அமைக்க ரூ.5 லட்சமும், வடிகால் கச்சா, வடிகால் பூங்கா அமைப்பு கட்டணம் என சுமார் ரூ.2 கோடி வரை மாநகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மனைப்பிரிவுக்கு ஒப்புதல் வழங்கப்படாமலும், மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம் செலுத்தப்படாத நிலையிலும் மாநகராட்சியின் பொறியாளர்களாலும், அதிகாரிகளாலும் சுமார் ரூ.2 கோடி வரை நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அதற்குரிய கட்டணம் பொதுமக்களிடம் வசூல் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு உத்தரவுக்கு புறம்பாக தான பத்திரம் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் நிதியிழப்புக்கான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதியிழப்பு குறித்து விசாரணை மாநகராட்சி கமிஷனர் தகவல் : இந்த பிரச்னை குறித்து மாநகராட்சி கமிஷனர் சுப்பையன் கூறுகையில், "அரசு உத்தரவுக்கு புறம்பாக தான பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். கமிஷனர் அதிகாரத்தையும் மீறி தான பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரிக்கப்படும். இதில் தவறு கண்டு பிடிக்கப்பட்டால் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நிதியிழப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்றார்'

Last Updated on Friday, 11 June 2010 06:09
 


Page 30 of 69