Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

குடிசைவாசிகள் ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்க கெடு

Print PDF

தினமணி 04.06.2010

குடிசைவாசிகள் ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்க கெடு

விருதுநகர், ஜூன் 3: அரசு திட்டப்படி, ஓலைக் குடிசைகளை கான்கிரீட் வீடுகளாகக் கட்டித் தருவதற்கான கணக்கெடுக்கும் பணி தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. எனவே, விருதுநகர் மாவட்டத்தில் குடிசைவாசிகள் தங்களது குடிசைகள் குறித்து பதிவு செய்யாதோர் இம்மாதம் இறுதிக்குள் (ஜூன் 30) அதற்குரிய படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 

வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் படிப்பகம்: நகர்மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர் வலியுறுத்தல்

Print PDF

தினமணி 01.06.2010

வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் படிப்பகம்: நகர்மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர் வலியுறுத்தல்

வாலாஜாபேட்டை, மே 31: ஆர்க்காடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் காலியாக உள்ள இடத்தில் படிபகம் கட்டித் தர நகராட்சி முன்வர வேண்டும் என நகர்மன்ற உறுப்பினர் சுந்தரம் வலியுறுத்தினார்.

ஆர்க்காடு நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றத் தலைவர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், சுந்தரம் மேற்கண்டவாறு பேசினார்.

கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியது:

19,20-வது வார்டுகளில் உள்ள சத்துணவுக் கூடங்களை அதிகாரிகள் சோதனையிட வேண்டும. குடிநீர் இணைப்புகளை உடனே வழங்க வேண்டும். கடைகளில் விளம்பரப் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்றனர். நகர்மன்றத் துணைத் தலைவர் பொன்.ராஜசேகரன், உறுப்பினர்கள் நந்தகுமார், ராஜா, சுரேஷ், வசந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

குடிசைகள் அகற்றம் நேற்றும் தொடர்ந்தது

Print PDF

தினகரன் 31.05.2010

குடிசைகள் அகற்றம் நேற்றும் தொடர்ந்தது

பெரும்பாக்கம்: பெரும்பாக்கத்தை அடுத்த நூக்கம்பாளையத்தில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக குடிசைகளை அகற்றும் பணி இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.பெரும்பாக்கத்தை அடுத்த நூக்கம்பாளையத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், 26 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 2007ம் ஆண்டு அந்த இடம் குடிசை மாற்று வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, 830 குடிசைகள் அகற்றப்பட்டன. தற்போது அங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இந்நிலையில், மீதமுள்ள, 1,036 குடிசைகளை அகற்றும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. தாம்பரம் ஆர்.டி.., சவுரிராஜன், சோழிங்கநல்லூர் தாசில்தார் ஜெயந்தி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் முன்னிலையில் குடிசைகள் அகற்றும் பணி நடந்தது. பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். நேற்று முன்தினம் மட்டும் 640 குடிசைகள் அகற்றப்பட்டன. மற்ற குடிசைகளை அகற்றும் பணி இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.

 


Page 32 of 69