Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஜூன் 5-ல் புதிய சென்ட்ரல் மார்க்கெட் திறப்பு

Print PDF

தினமணி    12.05.2010

ஜூன் 5-ல் புதிய சென்ட்ரல் மார்க்கெட் திறப்பு

மதுரை, மே 11: மதுரை மாட்டுத்தாவணியில் அமைந்துள்ள புதிய சென்ட்ரல் மார்க்கெட் அடுத்த மாதம் (ஜூன்) 5-ம் தேதி மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு..அழகிரியால் திறக்கப்படவுள்ளதாக மாநகராட்சி கமிஷனó எஸ்.செபாஸ்டின் தெரிவித்தார்.

புதிய மார்க்கெட் கட்டுமானப் பணிகளை கமிஷனர் செபாஸ்டின் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி முயற்சியால் அடிக்கல் நாட்டப்பட்ட மார்க்கெட் பணிகள் தற்போது முடியும்நிலையில் உள்ளது. இதில் 542 நிரந்தரக் கடைகள், 1000-க்கும் மேற்பட்ட தாற்காலிகக் கடைகள் ரூ.12 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இதில் பழைய சென்ட்ரல் மார்óக்கெட்டில் நிரந்தரமாக கடை வைத்துள்ள 524 நிரந்தரக் கடைக்காரர்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தாற்காலிகமாக வைத்துள்ளவர்களின் பட்டியல் பெறப்பட்டு மாநகராட்சிப் பொறியாளர்கள் மூலம் உண்மையான கடைக்காரர்கள் கண்டறியப்பட்டபின் அவர்களுக்கே கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

அடுத்த மாதம் 5-ம் தேதி புதிய மார்க்கெட் திறக்கப்படவுள்ளது. பின்னர் பழைய மார்க்கெட் செயல்பட்டு வந்த இடத்தில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வாகன நிறுத்துமிடமாக மாற்றப்படும் என்றார் கமிஷனர் செபாஸ்டின். ஆய்வுப் பணியின்போது நிர்வாகபó பொறியாளர் எஸ்.சந்திரசேகரன், உதவிக் கமிஷனர் (வருவாய்) ரா.பாஸ்கரன், உதவி நிர்வாகப் பொறியாளர் குழந்தைவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.