Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்ட்ரல் மார்க்கெட் தரைக்கடை ஒதுக்கீடு: ஆணையர் ஆய்வு

Print PDF

தினமணி       14.05.2010

சென்ட்ரல் மார்க்கெட் தரைக்கடை ஒதுக்கீடு: ஆணையர் ஆய்வு

மதுரை, மே 13: மதுரை மாநகராட்சி சென்டரல் மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு தரைக்கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. அதன் உண்மைத் தன்மை குறித்து வியாழக்கிழமை ஆய்வு செய்யப்பட்டதாக எஸ்.செபாஸ்டின் தகவல் தெரிவித்தார்.

மதுரை சென்ட்ரல் மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டு கடந்த மாதம் மாட்டுத்தாவணி பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது பணிகள் நிறைவடைந்து வரும் ஜூன் மாதம் மத்திய அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

பழைய சென்ட்ரல் மார்க்கெட்டில் உள்ள நிரந்தரக்கடைகள் மற்றும் தரைக்கடைகள் ஆகியவற்றுக்குப் புதிதாக கட்டப்பட்டுள்ள மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கடைகளுக்கு 14 தரைக்கடைகளைச் சேர்ந்த சங்கங்கள் 1259 கடைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மனுக்கள் வந்துள்ளன.

குறிப்பிட்ட மனுக்களை மாநகராட்சி உதவி ஆணையர் எஸ்.பி.ராஜகாந்தி, நிர்வாகப் பொறியாளர் சந்திரசேகரன் உதவி நிர்வாகப் பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஒவ்வொரு கடையாகச் சென்று கடையின் உரிமையாளர் பெயர் மற்றும் அவரது புகைப்படம் உள்ளிட்டவை சரியாக உள்ளதா என ஆய்வு செய்தனர்.

இந்த விசாரணை அûனைத்து தரைக்கடைகளிலும் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் மனுச் செய்தவர்களுக்கு தரைக் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட இருப்பதாக தெரிவித்தார்.