Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகரின் மையப் பகுதியில் நூலகம் அமைக்க நடவடிக்கை தேவை : கள்ளக்குறிச்சி நகராட்சி ஒத்துழைக்குமா?

Print PDF

தினமலர்           18.05.2010

நகரின் மையப் பகுதியில் நூலகம் அமைக்க நடவடிக்கை தேவை : கள்ளக்குறிச்சி நகராட்சி ஒத்துழைக்குமா?

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பொது நூலக புதிய கட்டடம் கட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும். கள்ளக்குறிச்சி வ..சி., நகரில் கடந்த 1957ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி கிளை நூலகம் திறந்து வைக்கப்பட்டது. நகரில் 70 ஆயிரத்திற்கும் மேற் பட்ட மக்கள் வசித்து வருகின் றனர். இவர்களில் 4,300 பேர் நூலகத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். புரவலர்கள் ஐந்து பேர் 5,000 ரூபாயும், 110 பேர் 1,000 ரூபாயும் கட்டி உறுப்பினராக இருக்கின்றனர். கள்ளக்குறிச்சி பொதுமக்களுக்கு நூலகத்தை தவிர எந்தவித பொழுதுபோக்கு அம்சமும் இல்லை. நூலகமும், நகரின் மையப்பகுதியில் இல்லாதது பெரும் குறை. சிறிய நூலகம் என்றபோதிலும், பல அரிய நூல்கள் உள் ளிட்ட 30 ஆயிரத்திற்கும் அதிகமாக புத்தகங்கள் உள்ளன.

நூலகத்தில் இரண் டாம் நிலை நூலகர், மூன்றாம் நிலை நூலகர் மற்றும் ஊர்ப்புற நூலகர் என மூன்று பேர் ஷிப்ட் முறையில் பணிபுரிந்து வருகின்றனர். போதிய இடவசதியில்லாததால், வாசகர்கள் அமர்ந்து படிக்க சிரமப்படுகின்றனர். விழுப்புரம் கலெக்டராக கோபால் பணிபுரிந்தபோது, கள்ளக்குறிச்சி கிளை நூலகம் கட்ட 30 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். அதனை தொடர்ந்து ராஜா தியேட் டர் அருகே நில ஆர்ஜித பணிகள் துவங்கி கிடப்பில் போடப் பட்டது. பொதுமக்களின் வசதிக் காக நூலகத்துறை கடந்த ஆண்டு புதிய ஜெராக்ஸ் மிஷின் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அரிய நூல்களின் பகுதியை ஜெராக்ஸ் எடுத்து பலரும் பயன் பெற்று வருகின்றனர். பாரத ஸ்டேட் வங்கி கள்ளக்குறிச்சி கிளை சார் பில் நூலகத்திற்கு கம்ப் யூட்டரை நன் கொடை தந்துள்ளனர். அதன்பின் கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி நகராட்சி அவசரக் கூட் டம் கூட்டி, மகாலட்சுமி தியேட்டர் அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கட்டுப்பாட் டில் நூலக கட்டடம் கட்ட தீர்மானம் நிறைவேற்றினர். நூலகத்திற்கு ஒப்புதல் கடிதம் தந்து கட்டடம் கட்டிக் கொள் ளும்படி கூறினர். நகராட்சி நிர்வாகம் தானமாக நூலகத்துறைக்கு அளித்தால் தான் கட்டடம் கட்ட முடியும் என்பதால் எந்த பணிகளும் நடக்கவில்லை. நூலகத்துறை கள்ளக்குறிச்சியில் பொது நூலகம் கட்ட ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரு வங்கூர் அருகே நூலகத்திற்கான இடத்தை வருவாய்த்துறையினர் அளவீடு செய்துள்ளனர்.

நகரிலிருந்து 5 கி.மீ., தொலைவிலுள்ள இங்கு நூலகம் கட்டினால், உரிய பயன்பாடின்றியும், வாசகர்கள் செல்லாத நிலையும் ஏற்படும். மாவட்ட நிர்வாகம், மக் கள் பிரதிநிதிகள், நூலகத்துறை அதிகாரிகள் முழு அக்கறை எடுத்து செயல் பட் டால் மட் டுமே, கள்ளக்குறிச் சியின் மையப் பகுதியில் பொது நூலகம் கட்ட முடியும்.

விலை கொடுத்து வாங்கவும் நூலகத்துறையினர் தயார்: நகராட்சிக்கு சொந்தமான இடத்தை விலை கொடுத்து வாங்கிடவும் நூலகத்துறை தயாராக உள்ளது. நகராட்சி மூலம் வசூலிக்கப்படும் வரியில், ரூபாய்க்கு 10 பைசா நூலகத்துறைக்கு செலுத் திட வேண்டும். அதன்படி ஆண்டு ஒன்றுக்கு 50 லட்ச ரூபாய் வரை கள்ளக்குறிச்சி நகராட்சி நிர்வாகம் மூலம் நூலகத்துறைக்கு வழங்குகிறது. நகரின் மையப்பகுதிகளான ஆர்.டி.., அலுவலகம் அருகில், சுந்தர வினாயகர் கோவில் அருகில், விருந்தினர் மாளிகை எதிரே உள்ள புறம்போக்கு இடத்தை நகராட்சி நிர்வாகம் நூலகத்துறைக்கு விலைக்கு கொடுத்தால், விரைவில் கட்டடம் கட்டி முடிக்கப்படும். நகரின் மையப்பகுதியில் நூலக கட்டடம் கட்டினால், நூலகத்தின் முழு பயன்பாடும் பொதுமக்களை சென்றடையும்.