Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அன்னமலை முருகன் கோயில் வளாகத்தில் ரூ.5.5 லட்சத்தில் காட்சிமுனை கோபுரம்

Print PDF

தினகரன்    20.05.2010

அன்னமலை முருகன் கோயில் வளாகத்தில் ரூ.5.5 லட்சத்தில் காட்சிமுனை கோபுரம்

மஞ்சூர், மே 20: அன்னமலை முருகன் கோயில் வளாகத்தில் காட்சிமுனை கோபுரம் அமைக்க சுற்றுலா மேம்பாட்டு

கழகம் ரூ.5.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

குந்தா பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இயற்கை காட்சிகள் நிறைந்த பகுதிகள் ஏராளமாக உள்ளது. இவற்றில் அப்பர்பவானி, அவலாஞ்சி, பென்ஸ்டாக், அன்னமலை முருகன் கோயில், மஞ்சகம்பை சத்திய நாகராஜர், ஹெத்தையம்மன் கோயில் உள்ளிட்டவை முக்கியமானதாகும்.

சீசனை முன்னிட்டு ஊட்டி, குன்னூர் ஆகிய பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குந்தா பகுதியிலுள்ள சுற்றுலா தலங்களை பார்வையிடவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் ஓணிகண்டி அருகேயுள்ள மலை மீது அன்னமலை முருகன் கோயில் உள்ளது.

இப்பகுதியை சுற்றிலும் இயற்கை காட்சிகள் சூழ்ந்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் ஒலி மாசு இல்லாத அமைதியான இயற்கை சூழல் நிறைந்த பகுதியாக இருப்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பலரும் வழிபாட்டிற்கு பின் பல மணி நேரம் இங்கே தங்குகின்றனர். இக்கோயிலுக்கு வரும் பயணிகள் எண்ணிக் கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகி றது.

இந்நிலையில் இங்கு சுற்றுலா பயணிகள் வசதிக்காக கீழ்குந்தா பேரூரா ட்சி சார்பில் காட்சிமுனை கோபுரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில் ரூ.3 லட்சத்தில் காட்சிமுனை கோபுரமும், காட்சிக்கு முனைக்கு செல்ல ரூ.2.5 லட்சத்தில் நடை பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டு பூமி பூஜை போடப்பட்டுள்ளது.அன்னமலை முருகன் கோயில் முன்புறமுள்ள சிவன் கோயில் அருகே இந்த காட்சி முனை கோபு ரம் அமைய உள்ளது. இது சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற் பை பெரும் என்பதில் சந்தேகமில்லை.