Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாலைகளைச் சுத்தம் செய்ய நவீன வாகனங்கள்

Print PDF

தினமணி 10.06.2010

சாலைகளைச் சுத்தம் செய்ய நவீன வாகனங்கள்

கோவை, ஜூன் 9: கோவை மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்டுள்ள சாலைகளைச் சுத்தம் செய்யும் நவீன துப்புரவு வாகனத்தின் இயக்கத்தை, துணை முதல்வர் மு..ஸ்டாலின் புதன்கிழமை துவக்கி வைத்தார்.

÷கோவை நகரின் பிரதான சாலைகளான அவிநாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை ஆகியவற்றில் சாலையோரம் மற்றும் தடுப்புகளின் ஓரங்களில் சேரக்கூடிய மண், தூசு துகள்களைச் சுத்தப்படுத்த இந்த வாகனம் பயன்படுத்தப்படும்.

÷திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ. 1.30 லட்சத்தில் 3 துப்புரவு வாகனங்கள் வாங்கப்பட உள்ளன. இவற்றில் இரண்டு, தலா 6.5 டன் கொள்ளளவு உடையவை. மற்றொன்று 5 டன் கொள்ளளவு கொண்டது.

இந்த துப்புரவு வாகனத்தில் நாளொன்றுக்கு 40 கி.மீ. தூரம் சுத்தப்படுத்த முடியும்.

÷முதல்கட்டமாக ஒரு துப்புரவு வாகனம் வந்துள்ளது. இதை துணை முதல்வர் ஸ்டாலின் புதன்கிழமை பார்வையிட்டு துவக்கி வைத்தார். மற்ற இரு வாகனங்கள், செம்மொழி மாநாட்டுக்குள் வரவழைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

÷தலா 8 மணி நேர அளவில் இரண்டு ஷிப்டுகளாக இந்த வாகனத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட இந்த இயந்திரம், புனேவைச் சேர்ந்த டீலரிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளது.

÷உள்நாட்டு தயாரிப்பான லாரி சேஸில் இந்த இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தை விற்பனை செய்த நிறுவனத்தினரே வாகனத்தை இயக்கும் பணியை, மூன்று மாதங்களுக்கு மேற்கொள்வர். அதன் பிறகு இப்பணியை டெண்டர் மூலம் தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.