Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி இலவச விநியோகம் ராஜாஜிநகர் மக்களுக்கு கழிவுகளை சேகரிக்க தொட்டி

Print PDF

தினகரன் 14.06.2010

மாநகராட்சி இலவச விநியோகம் ராஜாஜிநகர் மக்களுக்கு கழிவுகளை சேகரிக்க தொட்டி

பெங்களூர், ஜூன் 14:பெங்களூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. இதில் பொதுமக்களையும் ஈடுபடுத்தும்பொருட்டு, ராஜாஜிநகர் பகுதியிலுள்ள வீடுகளில் கழிவுகளை தரம்பிரித்து சேகரிக்க இலவசமாக குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டன.

பெங்களூர் மாநகராட்சி எல்லையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திடக்கழிவுபொருட்களை உலர்பொருள் மற்றும் ஈரப்பொருள் என தனித்தனியாக பிரிக்க சிகப்பு மற்றும் நீலநிற குப்பைத்தொட்டிகளை மாநகராட்சி வழங்கி வருகிறது.

பெங்களூர், ராஜாஜிநகர் முதலாவது ஆர்பிளாக்கில் வசித்துவரும் 360 குடும்பங்களுக்கு சிகப்பு மற்றும் நீலநிற குப்பைதொட்டிகள் அளிக்கப்பட்டன.திடக்கழிவு மேலாண்மையில் மக்களையும் ஈடுபடுத்துவதற்காக இத்திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. ராஜாஜிநகரில் இத்திட்டத்தை எம்.எல்.. என்.எல்.நரேந்திரபாபு துவக்கிவைத்தார். பின்னர் அவர் பேசுகையில்,‘எல்லா பகுதிகளிலும் கழிவுபொருட்களை தனித்தனியாக பிரிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டியது அவசியம். எனினும், இத்திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் கடினமானபணியாகும். பெங்களூர் போன்ற நகரில் திடக்கழிவுமேலாண்மை பெரும்சவாலாகி வருகிறது.’ என்றார்.

அப்பகுதி கவுன்சிலர் எஸ்.ஹரீஷ் கூறுகையில்,‘திடக்கழிவு மேலாண்மை தொடர்பான விஷயங்கள் கருத்தரங்குகளில் விவாதப்பொருளாக மட்டும் இருக்கக்கூடாது. குப்பைகளை உலர்பொருள்மற்றும் ஈரப்பொருள் என தனித்தனியாக பிரிக்க பொதுமக்கள் பழகினால், எதிர்கால சந்ததியினர் எந்த சிக்கலும் இல்லாமல் வாழலாம். இத்திட்டத்தில் நம் குடும் பத்தலைவிகள் பெரும்பங்குவகிக்கிறார்கள். சமையல் அறைகளில் அதிக நேரம் செலவிடும் பெண்மணிகள், அங்கு குப்பைகளை சேகரிக்கிறார்கள். ஈரப்ªபாருட்களை மட்டும் தனியாக பிரித்தெடுத்தால், அதனை இயற்கை உரமாக மறுசுழற்சி செய்து சுற்றுச்சூழலுக்கு பாதகமில்லாமல் பயன்படுத்தலாம்.’ என்றார். வீதிவீதியாக சென்ற எம்.எல்.. மற்றும் கவுன்சிலர்கள் எல்லா குடும்பங்களுக்கும் சிகப்பு(உலர்பொருட்கள்), நீலநிற(ஈரப்பொருட்கள்) குப்பைதொட்டிகளை வழங்கினர்.