Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிரப் ரோட்டில் நெரிசல் குறைக்க ரூ.24 லட்சத்தில் நடைபாதை மேம்பாலம் கட்ட திட்டம்

Print PDF

தினகரன் 20.07.2010

பிரப் ரோட்டில் நெரிசல் குறைக்க ரூ.24 லட்சத்தில் நடைபாதை மேம்பாலம் கட்ட திட்டம்

ஈரோடு, ஜூலை 20:ஈரோடு பிரப் ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக இப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் பிரப் ரோட்டில் மக்கள் சாலையை கடந்து செல்வதற்கு கூட மிகவும் சிரமப்படுகின்றனர். இச்சாலையில் செங்குந்தர் நர்சரி, செங்குந்தர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கலைமகள் கல்வி நிலையத்தில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் சாலையை கடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் இப்பகுதியிலுள்ள மருத்துவமனைகள், வணிக வளாகங்களுக்கு நடந்து செல்பவர்களும் சாலையை கடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர். காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து போலீசார் மூலம் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டு மாணவ, மாணவிகள் சாலையை கடந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இருப்பினும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பிரப் ரோட்டில் சவீதா மருத்துவமனை சந்திப்பு அருகே இரும்பால் ஆன நடைபாதை மேம்பாலம் கட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்று ஈரோடு பிரப் ரோட்டில் நடைபாதை மேம்பாலம் கட்ட ரூ.24 லட்சம் செல வாகும் என மாநகராட்சி நிர்வாகம் மூலம் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. நடை பாதை மேம்பாலம் கட்ட எம்எல்ஏ என்கேகே.பி.ராஜா சட்டமன்ற தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.18.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். மீதமுள்ள தொகையை மாநகராட்சியின் பொதுநிதியிலிருந்து பெற்று நடைபாதை மேம்பாலம் கட்டும் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று பிரப் ரோட்டில் நடைபாதை இரும்பு மேம்பாலம் கட்டும் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை எம்எல்ஏ என்கேகே.பி.ராஜா ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பிறகு அவர் கூறியதாவது: பிரப் ரோட்டில் செங்குநர் நர்சரி பள்ளிக்கு அருகிலுள்ள பஸ் ஸ்டாப்பில் இருந்து கலைமகள் கல்வி நிலையத்தை இணைக் கும் வகையில் நடைபெற உள்ள இந்த இரும்பு மேம் பாலம் கட்டும் பணியில் 6 மீட்டர் உயரத்தில் 2 மீட்டர் அகலத்தில் 40 படிக்கட்டுகள் வீதம் வைத்து கட்டப்பட உள்ளது. இந்த பணியை 3 மாதங்களில் துவங்கி விரை வில் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆய்வின் போது துணை மேயர் பாபு என்கிற வெங்கடாசலம், ஆணை யாளர் பாலச்சந்திரன், மாநகராட்சி பொறி யாளர் வடிவேல், கவுன்சிலர்கள் மதன்மோகன், பாத்தி மா, ராதாமணிபாரதி உட்பட பலர் உடன் இருந்தனர்.