Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அம்பை நகராட்சியில் ரூ.50 லட்சத்தில் புதிய கட்டிடம் துணை முதல்வர் திறக்கிறார்

Print PDF

தினகரன் 05.08.2010

அம்பை நகராட்சியில் ரூ.50 லட்சத்தில் புதிய கட்டிடம் துணை முதல்வர் திறக்கிறார்

அம்பை, ஆக.5 : அம்பை நகராட்சியில் ரூ.50 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட கூடு தல் கட்டிடத்தை துணை முதல்வர் மு.. ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் பொதுமக்கள் குடிநீர் கட்ட ணம், சொத்துவரி செலுத்துவதற்கான கூடுதல் கவுன்டர்கள், நகராட்சி தலைவருக்கான அறை, நிர்வாக அதிகாரி அறை மற்றும் கூட்ட அரங்கு போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. ரூ.50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய கட்டிடத்தை நாளை 6ம் தேதி துணை முதல்வர் மு..ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இவ்விழாவில் சபாநாயகர் ஆவுடையப்பன், கலெக்டர் ஜெயராமன், நகராட்சி தலைவர் பிரபாகரபாண்டியன், நிர்வாக அதிகாரி அண்ணாமலை, துணைத்தலைவர் அந்தோணிச்சாமி மற்றும் கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் பாவூர்சத்திரத்தில் நடந்தது. காசி மணி தலைமை வகித்தார். ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் விஜயன், வேல்சாமி, சுரண்டை நகர செயலாளர் முத்துக்குமார், ஓவியர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரணி ஊராட்சி தலைவர் அருணோதயம் வரவேற்றார்.

துணை முதல்வர் மு..ஸ்டாலின் வருகை குறித்து ஒன்றிய செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் பேசினார்.

கூட்டத்தில் கோவை செம்மொழி மாநாட்டை சிறப்புற நடத்திய முதல்வர் கருணாநிதி, 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கிய கனிமொழி எம்.பி.யை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாளை தென்காசி வரும் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு எல்லைப்புளியில் சிறப்பான வரவேற்பு கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் ரவிச்சந்திரன், சுதன், தளவாய்சாமி, பொன்பாண்டி, நியூட்டன், பரசுராமன், சீனித்துரை, ஆசிரியர் ராஜவேல், வைத்தீஸ்வரி, அந்தோணிசாமி, தங்கதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இடையர்தவணை ஊராட்சி தலைவர் ராமசாமி நன்றி கூறினார்.

அம்பையில் கட்டப்பட்டுள்ள புதிய நகராட்சி அலுவலகத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறக்கிறார்.