Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஸி24 கோடியில் கட்டப்படும் ரங்கராஜபுரம் மேம்பாலம் நவம்பரில் திறக்கப்படுகிறது

Print PDF

தினகரன் 18.08.2010

ஸி24 கோடியில் கட்டப்படும் ரங்கராஜபுரம் மேம்பாலம் நவம்பரில் திறக்கப்படுகிறது

சென்னை, ஆக.18: கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் t23.76 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம், நவம்பரில் திறக்கப்படும் என்று மேயர் தெரிவித்தார். சென்னை மாநகராட்சியும்&ரயில்வே துறையும் இணைந்து ரங்கராஜபுரம் பகுதியில் மேம்பாலம் கட்டப்படுகிறது. இதை, மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் மேயர் கூறியதாவது:

கோடம்பாக்கம், ஆற்காடு சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரங்கராஜபுரத்தில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று துணை முதல்வர் மு..ஸ்டாலின் மேயராக இருந்தபோது திட்டமிட்டார். அதன்படி, 2006&2007ம் ஆண்டு மானிய கோரிக்கையின்போது துணை முதல்வர் மு..ஸ்டாலின், ரங்கராஜபுரம் ரயில்வே லெவல் கிராசிங்கிற்கு பதிலாக மேம்பாலம் அமைக்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவித்தார்.

அதன்படி, இந்த பகுதியில் t23.76 கோடி செலவில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படுகிறது. மேம்பாலம் கட்டப்படும் பகுதியில் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்களை மாற்றியமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. மின்சார கம்பி வடங்கள் மாற்றி அமைக்கும் பணியும் நிறைவு பெற்றுள்ளது. 98 ஆழ்துளை கடைக்கால்கள், 22 தூண்கள், 14 மேல்தளம் அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. மேல்தளம் அமைக்கும் பணியில் சென்னை மாநகராட்சி பகுதியில் ஆழ்துளை கடைக்கால்கள் மற்றும் து£ண்கள் அமைக்கும் பணியும் முடிக்கப்பட்டுள்ளன. மேல்தளம் அமைக்கும் பணிகள் நடக்கிறது. ரயில்வே பகுதியில் பணிகள் நடந்து வருகிறது.

இந்த மேம்பாலத்தினால் கோடம்பாக்கம், தியாகராயநகர், மேற்குமாம்பலம், ரங்கராஜபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் மிகவும் பயன்பெறும். நவம்பர் மாத இறுதியில் பாலம் கட்டும் பணி முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும். இவ்வாறு மேயர் தெரிவித்தார்.

ஆய்வின்போது முன்னாள் மேயர் சா.கணேசன், துணை மேயர் ஆர்.சத்யபாமா, மன்ற ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், மன்ற எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி, மண்டலகுழுத்தலைவர் கே.ஏழுமலை, கவுன்சிலர்கள் வெல்டிங் மணி, ராஜன்,சுசீலா கோபாலகிருஷ்ணன், தலைமைப் பொறியாளர் விஜயகுமார், மேற்பார்வை பொறியாளர்(பாலங்கள்) ராமமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

1,500 டன் எடையை தாங்கும் ‘ஒய்’ வடிவிலான மேம்பாலம்

இந்த மேம்பாலம், ‘தி.நகர் பசுல்லா சாலை பக்கம் 264.54 மீட்டரும், கோடம்பாக்கம், ரங்கராஜபுரம் பக்கம் 303.40 மீட்டரும் கோடம்பாக்கம் ரயில்வே நிலையம் அருகில் 297 மீட்டரும், ரயில்வே பகுதியில் 97.20 மீட்டர் என மொத்தம் 962.14 மீட்டர் நீளமும், 8.5 மற்றும் 6.5 மீட்டர் அகலமும் கொண்டதாக இம்மேம்பாலம் ஒய்வடிவமைப்பில் இருவழி போக்குவரத்திற்கு ஏற்ப கட்டப்படுகிறது. ரயில்வே தடத்தின் மீது கட்டப்படும் மேல்தளம் சுமார் 1,500 டன் எடை தாங்கும் வகையில் நவீன வகையில் வடிவமைக்கப்படுகிறதுஎன்று மேயர் கூறினார்.