Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதை சாக்கடை திட்டப் பணி டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும்: அமைச்சர் உத்தரவு

Print PDF

தினமணி 27.08.2010

புதை சாக்கடை திட்டப் பணி டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும்: அமைச்சர் உத்தரவு

திருவண்ணாமலை, ஆக. 26: திருவண்ணாமலை நகரில் புதை சாக்கடை திட்டப்பணிகளை டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என உணவுத் துறை அமைச்சர் எ..வேலு உத்தரவிட்டுள்ளார்.

|58 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதை சாக்கடை திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சர் வேலு பேசியது:

திருவண்ணாமலை நகரில் புதை சாக்கடை திட்டம் அமைக்க வேண்டும் என்பது 30 ஆண்டுக்கால கனவாகும். பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பின் நகராட்சி நிர்வாகம் பங்குத் தொகை அளிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

பல்வேறு நகரங்களில் புதை சாக்கடை பணிகள் மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன. அவற்றை ஒப்பிடும்போது திருவண்ணாமலை நகரில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதுவரை 95 சதவீதம் திட்டப்பணிகள் முடிந்துள்ளன.

திருவண்ணாமலை நகருக்கு பெüர்ணமி கிரிவலத்துக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் பணிகளை மேற்கொள்வதில் சிறிது பிரச்னை உள்ளது. புதை சாக்கடை பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் கெட்ட பெயர் உண்டாகும். எனவே, அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து இத்திட்டப் பணிகளை வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும். புதை சாக்கடை திட்டப்பணிகளை முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டால் தேவையான நிதியை பெற்றுத் தரவும் தயாராக உள்ளேன் என்றார் வேலு.