Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திடக்கழிவு திட்டத்தின் கீழ் ரூ4,50 லட்சத்தில் குப்பைஅள்ளும் நவீன இயந்திரம்

Print PDF

தினகரன் 31.08.2010

திடக்கழிவு திட்டத்தின் கீழ் ரூ4,50 லட்சத்தில் குப்பைஅள்ளும் நவீன இயந்திரம்

பெரம்பலூர், ஆக. 31: பெரம்பலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்களால் வெளியேற்றப்படும் குப்பைகளில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் ஆகியவற்றை தரம் பிரிக்கவும், தரம் பிரிக்கப்பட்ட மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கவும் பெரம்பலூர் நகராட்சியில் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்க பெரம்பலூர் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தலாரூ8,000 என ரூ50 லட்சம் மதிப்பில் குப்பை அள்ளும் இயந்திரங்கள் வாங்கப்பட்டன. பெரம்பலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சித்தலைவர் இளையராஜா சுகாதாரப்பணிகளுக்காக அந்த இயந்திரங்களை ஒப்படைத்தார்.

நகராட்சி ஆணையர் (பொ) இன்ஜினியர் கருணாகரன், துணைத்தலைவர் முகுந்தன், கவுன்சிலர்கள் பாரி, ஜெயக்குமார், சிவக்குமார், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.