Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பஸ் ஸ்டாண்டுகளுக்கு இடையே சுரங்க நடைபாதை பணி விரைவில் முடியும்

Print PDF

தினகரன் 09.09.2010

பஸ் ஸ்டாண்டுகளுக்கு இடையே சுரங்க நடைபாதை பணி விரைவில் முடியும்

பொள்ளாச்சி, செப். 9: பொள்ளாச்சியில் பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டுகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுரங்க நடைபாதை கட்டும் பணி இம்மாத இறுதிக்குள் போக்குவரத்து சீராகும் அளவிற்கு முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில் இட நெருக் கடி காரணமாக பஸ்களும், பொதுமக்களும் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட் டது. இதன் காரணமாக பல ஆண்டு திட்டமான புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டி முடிக்கப்பட்டது. இவ்விரு பஸ் ஸ்டாண்டுகளுக்கும் இடையே பாலக்காடு ரோட் டில் போக்குவரத்து மிகுந்து காணப்படுவதால் பயணிகள் இரு பஸ் ஸ்டாண்டுகளுக்கும் இடையே சென்று வருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படத் துவங்கியது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண இரு பஸ் ஸ்டாண்டுகளுக்கும் இடையே சுரங்க நடைபாதையை அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதுதொடர்பாக நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ரூ. 40 லட்சத்தில் திட்ட மதிப்பீடும் தயார் செய்யப்பட்டு அரசிடம் அனுமதி பெறப்பட்டது.

இம்மாத இறுதியில் போக்குவரத்து சீராகும் விசர்ஜன ஊர்வலத்திற்கு தற்காலிக அனுமதி

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக சப்&கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விசர்ஜன ஊர்வலத்திற்குள் சுரங்க நடைபாதை பணிகள் முடிக்கப்பட்டுவிடும் என்று ஆர்.டி.. அழகிரிசாமி தெரிவித்தார். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், பாதுகாப்பு காரணமாக விநாயகர் விசர்ஜன ஊர்வலத்திற்காக மட்டும் அந்த வாகனங்கள் செல்லும் வகையில் தற்காலிகமாக மேற்படி பகுதியில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும். அதன் பிறகு தொடர்ந்து பணிகள் மேற்கொண்டு இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இப்பிரச்னைக்கு தீர்வு காண இரு பஸ் ஸ்டாண்டுகளுக்கும் இடையே சுரங்க நடைபாதையை அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதுதொடர்பாக நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ரூ. 40 லட்சத்தில் திட்ட மதிப்பீடும் தயார் செய்யப்பட்டு அரசிடம் அனுமதி பெறப்பட்டது.

இதனையடுத்து, சுரங்க நடைபாதை கட்டும் பணி யினை நகராட்சி நிர்வாகம் நெடுஞ்சாலைத் துறை வசம் ஒப்படைத்தது. இப்பணி துவங்குவதற்கு முன்பு நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி பஸ், லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ராஜாமில் ரோடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய ரோடுகள் வழியாக திருப்பி விடப்பட்டன. தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறையினர் இரு பஸ் ஸ்டாண்டுகளுக்கும் இடையே சுரங்க நடைபாதை கட்டும் பணியினை துவக்கினர். இப்பணி குறிப்பட்ட காலத்திற்கு மேல் ஆகியும் முடிவடையாததால் நகரில் போக்குவரத்து ஸ்தம்பித்து பொதுமக்கள் அவதிப்படத் துவங்கினர்.ஆகவே, இப்பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.

இந்நிலையில், இப்பணி இம்மாத இறுதிக்குள் போக்குவரத்து சீராகும் அளவிற்கு முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

சுரங்க நடைபாதை அமைக்கும் பணி கடந்த பிப்ரவரி மாதம் துவங்கப்பட்டது. 6 மாத காலத்திற்குள் இப்பணியை முடிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மேற்படி இடத்தில் பாறைகள் அதிகம் இருந்ததாலும், ரோட்டின் இரு புறங்களிலும் கட்டுமான பொருட்களை போட்டு வைப்பதில் பயணிகளுக்கும், இரு புறமும் உள்ள கடைக்காரர்களுக்கும் இடையூறு ஏற்பட்டதாலும் இப்பணினை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க இயலவில்லை.இருந்தபோதிலும் பணிகள் வேகப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக இம்மாத இறுதிக்குள் போக்குவரத்து சீராகும் அளவிற்கு பணிகள் முடிக்கப்பட்டு விடும். அதன் பிறகு பக்கவாட்டிலும், நுழைவு மற்றும் வெளியறும் பகுதிகளிலும் கான்கிரீட்டுகள் அமைப்பது, சுரங்க நடைபாதைக்குள் டைல்ஸ்கள் பதிக்கும் பணி, மின் இணைப்பு உள்ளிட்ட பணிகள் வேகமாக செய்து அடுத்த மாதம் அதாவது அக்டோபர் மாத இறுதிக்குள் சுரங்க நடைபாதை பணிகள் முழுமை பெறும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.