Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி மைய அலுவலகத்தில் ரூ.50 லட்சத்தில் புதிய கட்டடம்

Print PDF

தினமலர் 16.09.2010

மாநகராட்சி மைய அலுவலகத்தில் ரூ.50 லட்சத்தில் புதிய கட்டடம்

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தின் முதல் மாடியில் ரூ.50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் திறந்துவைத்தார்.

நெல்லை மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் வ..சி.பிரதான கட்டடம் கட்டப்பட்டு நீண்ட காலம் ஆகிவிட்டதால் பழைய கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் ரூ.5 கோடி செலவில் 42 ஆயிரத்து 646 சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளிகள் பெறப்பட்டு பணி விரைவில் துவங்கப்படவுள்ளது.

இந்த புதிய கட்டடம் கட்டுவதற்கு சுமார் 15 மாத காலங்கள் ஆவதால் பழைய கட்டடங்களில் செயல்பட்டு வரும் அலுவலகங்களுக்காக மாற்று இட தேவையின் அவசியம் கருதி அண்ணா நூற்றாண்டு விழா கட்டடத்தின் முதல் தளத்தில் 5 ஆயிரத்து 345 சதுர அடி பரப்பளவில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டடத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் தலைமை வகித்து புதிய கட்டத்தை திறந்துவைத்தார். துணைமேயர் முத்துராமலிங்கம், கமிஷனர் சுப்பையன் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர்கள் விஸ்வநாதன், முகம்மதுமைதீன், கவுன்சிலர்கள் ப.ரா.வெங்கடேசன், நமச்சிவாயம் () கோபி, அப்துல்வகாப், சுரேஷ், வக்கீல் துரை, கந்தன், பேபிகோபால், அப்துல்காதர், ரேவதிஅசோக், மெடில்டா ஜோசப், ராஜகுமாரி, ராஜேஸ்வரி, சுலைகாபீவி, சைபுன்னிஷா, செயற்பொறியாளர் நாராயணன் நாயர், உதவிக்கமிஷனர்கள் சுல்தானா, கேசவதாஸ், தாசில்தார் சங்கரசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ரூ.5 கோடியில் ஒருங்கிணைந்த புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட பின் முதல் தள கட்டடம் மாமன்ற கூட்ட அரங்காக செயல்படும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் தள கட்டடத்தில் கமிஷனர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒருங்கிணைந்த புதிய கட்டடம் கட்டி முடிக்கப்படும் வரை செயல்பட்டு வரவுள்ளது.