Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காமராஜர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரூ. 15 லட்சத்தில் கூடைப்பந்து மைதானம்

Print PDF

தினமலர் 16.09.2010

காமராஜர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரூ. 15 லட்சத்தில் கூடைப்பந்து மைதானம்

விழுப்புரம்: அண்ணாதுரை பிறந்த நாள் விழாவையொட்டி விழுப்புரம் காமராஜர் நகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு வினா-வங்கி புத்தகம் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆசிரியர் விஜயன் முன் னிலை வகித்தார்.

சேர்மன் ஜனகராஜ் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம், கணினி, அறிவியல் பாடங்களுக்கான வினா- வங்கி புத்தகத்தை வழங்கி பேசியதாவது: கடந்த 1996ம் ஆண்டிலிருந்து சேர் மன் பொறுப்பேற்ற நாள் முதல் இந் நாள் வரை இப்பள்ளிக்கு பல நல்ல திட்டங்களை வகுத்து தந்துள்ளேன். அமைச்சர் பொன்முடி, முதல்வருடன் பேசி விழுப்புரம் நகரில் சிமென்ட் சாலை அமைக்க 7.5 கோடி ரூபாய் நிதியை நகராட்சிக்கு பெற்று தந்துள்ளார். அடுத்த ஓராண்டிற்குள் விழுப்புரம் நகரம் சிமென்ட் சாலைகள் போடப்பட்டு புது பொலிவுடன் காணப்படும்.

இப்பள்ளிக்கு பல வசதிகள் செய்து தந்திருந்தாலும் மேலும் பள்ளிக்கு இருக்கைகள், மின்விளக்கு, 15 லட்சம் ரூபாய் செலவில் கூடைப் பந்து மைதா னம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஓராண்டிற்குள் செய்து தரப்படும். பள்ளி வாழ்க்கையில் மாணவர்கள் கஷ்டப் பட்டு படித்தால் அவர்கள் கல்லூரி படிப்பிற்கான சீட் வீடு தேடி வரும். நன்றாக படித்து வளமான வாழ்வை உருவாக்கி கொள்ள வேண்டும். இவ்வாறு சேர்மன் ஜனகராஜ் பேசினார். பள்ளி ஆசிரியர்கள் பழனி, பாலசுப்ரமணியன், சந்தானம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.