Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"மாநகராட்சியில் கொசு மருந்தடிக்கும் கருவிகள் விரைவில் வாங்கப்படும்'

Print PDF

தினமணி 21.09.2010

"மாநகராட்சியில் கொசு மருந்தடிக்கும் கருவிகள் விரைவில் வாங்கப்படும்'

திருச்சி,​​ செப்.​ 20:​ திருச்சி மாநகராட்சியில் வார்டுக்கு தலா இரண்டு வீதம் 120 கொசு மருந்தடிக்கும் கருவிகள் விரைவில் வாங்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் தா.​ சவுண்டையா.

​ ​ இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது:

​ ​ மழைக்காலம் தொடங்கிவிட்டதை அடுத்து,​​ திருச்சி மாநகராட்சி சார்பில் 60 புகை மருந்தடிக்கும் கருவிகளும்,​​ 60 தெளிப்பு மருந்தடிக்கும் கருவிகளும் வாங்கப்படவுள்ளன.​ ஏற்கெனவே,​​ 18 புகை மருந்தடிக்கும் இயந்திரங்களும்,​​ ஒரு பெரிய அளவிலான வாகன இயந்திரமும் இயங்கி வருகின்றன.

​ ​ ​ லார்வா நிலையிலேயே கொசுப் புழுக்களை அழிக்கும் வகையில்,​​ 400 கிலோ மருந்து வாங்கப்பட்டுள்ளது.​ 250 கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து கொசுப்புழுக்கள் உள்ள கழிவுநீர்ப் பகுதிகளில் தெளித்தால்,​​ அவற்றை உள்கொள்ளும் கொசுக்களின் வயிற்றில் பாக்டீரியாக்கள் பெருமளவில் உற்பத்தியாகி கொசுப் புழுக்களைக் கொன்று விடும்.​ இந்த முறையில் தற்போது மாநகரப் பகுதிகளில் தீவிரமாக கொசு ஒழிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் சவுண்டையா. ​ ​ பேட்டியின்போது மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் கே.சி.​ சேரன் உடனிருந்தார்.