Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருப்புத்தூரில் பாதாள சாக்கடைப்பணி திட்டம் அடுத்த ஆண்டு துவங்கும் அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு

Print PDF

தினகரன் 23.09.2010

திருப்புத்தூரில் பாதாள சாக்கடைப்பணி திட்டம் அடுத்த ஆண்டு துவங்கும் அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு

திருப்புத்தூர், செப்.23: திருப்புத்தூரில் பாதாள சாக்கடைப்பணி திட்டம் அடுத்த ஆண்டு துவங்கும் என்று அமைச்சர் பெரியகருப்பன் பேசினார். திருப்புத்தூர் காளியம்மன் கோயில் அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலையில் பூமிபூஜை நடந்தது. சென்னை வாட்டர் சிஸ்டம்ஸ் பி.லிட் விஞ்ஞானி பஞ்சாட்சரம் முன்னிலை வகித்தார். பேரூராட்சி தலைவர் சாக்ளா வரவேற்றார். பூமிபூஜையை துவக்கி வைத்து அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:

மத்திய, மாநில அரசுகள் சார்பில் இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது. நாட்டில் ஆயிரக்கணக்கில் உள்ள உள்ளாட்சி நிர்வாகங்களில் 51 இடங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டன. இதில், திருப்புத்தூர் பேரூராட்சியும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நீண்டகாலமாக இருந்து வந்த குடிநீர் பிரச்னை காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தீர்ந்தது. தற்போது சுகாதாரமான குடிநீர் கிடைக்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூமிபூஜை நடத்தப்பட்டுள்ளது.

இன்னும் 11 மாதத்திற்குள் திட்டம் நிறைவேற்றப்படும். அதற்குள் விரை வாக முடிக்க உத்தரவிட்டுள்ளேன். தற்போது காளியம்மன் கோயில் அருகே சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. இதேப் போல் சந்தைப்பேட்டை அருகே மற்றொரு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப் பட உள்ளது. வரும் காலங்களில் நகரின் அனைத்து வார்டுகளிலும் விரிவுப்படுத்தப்படும். தமிழகத்தில் 5 பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான அனுமதி கிடைத்துள்ளது. இதில் திருப்புத்தூர் பேரூராட்சியும் ஒன்று.

இத்திட்டத்திற்காக ரூ.15 கோடி வழங்க அனுமதி கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டில் பாதாள சாக்கடை திட்டப்பணி துவங்கும். அடிப்படை வசதிகள் இல் லாமல் இருந்ததால் பலர் வெளி இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். இனி திருப்புத்தூரை தேடி வரும் நிலை உருவாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

திமுக ஒன்றியச்செயலாளர் செழியன், பேரூராட்சி துணைத்தலைவர் கார்த்திகேயன், காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் சுப்பிரமணியன், வர்த்தக சங்கத்தலைவர் லட்சுமணன், பொரு ளாளர் பிச்சைமுகம்மது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செயல்அலுவலர் அமானுல்லா நன்றி கூறினார்.