Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பொதுமக்கள் எதிர்பார்ப்பு சிதம்பரத்தில் புதிய பாதாள சாக்கடை பணிகள் துவங்குவது எப்போது ?

Print PDF

தினகரன் 28.09.2010

பொதுமக்கள் எதிர்பார்ப்பு சிதம்பரத்தில் புதிய பாதாள சாக்கடை பணிகள் துவங்குவது எப்போது ?

சிதம்பரம் செப். 28: மாநகரங்கள், நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவருவதற்கு முன்பே சுமார் 60 வருடங்களுக்கு முன்பு சிதம்பரம் நகராட்சியால் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந் தது. மாவட்ட தலைநகரான கடலூரிலேயே தற்போது தான் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. சுற்றுலா நகரமான சிதம்பரத்தில் 1962&ஆம் ஆண்டில் அப்போது உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது.

 இங்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம், நடராஜர்கோவில், அருகில் பிச்சாவரம் சுற்றுலா மையம், புகழ்பெற்ற கோவில்கள் உள்ளதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், வெளிமாநில மாணவர்கள் ஏராளமானோர் இங்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். மக்கள் தொகையும் அதிகரித்துள்ளது. இதனால் விடுதிகள், வர்த்தக நிறுவனங்களும் அதிகமாக உள்ளன. இந்நிலையில் மக்கள் தொகை அதிகரிப்பால் பழைய பாதாள சாக்கடைகள் நிரம்பியும், ஆங்காங்கே உடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஓடுவதும் வாடிக்கையாகிவிட்டது. தற்போதுள்ள மக்கள் தொகை ஏற்ப தமிழக அரசு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக ரூ.44 கோடியில் புதிய பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்தது.

இப்பணிகள் துவங்கப்படாமலேயே உள் ளது. தற்போது மழை கால மாக உள்ளதால் பாதாள சாக்கடைகள் பொங்கி மழைநீரில் கலந்து சாலை யில் தண்ணீர் நிற்பதால் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் நிலை உள்ளது. மேலும் இந்த கழிவுநீர் மழைநீருடன் கலந்து பாலமான், மற்றும் ஓமக்குளத்தில் கலப்பதால் அப்பகுதி மக்கள் குளத்தை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட குழாய்கள் துரு பிடித்து உடைப்புகள் ஏற்பட்டு குடிநீரில் கழிவுநீர் கலந்துவருகிறது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்றுநோய்கள் வரும் அபாயம் உள்ளது. புதிய பதாளா சாக்கடை திட்டப் பணிகள் துவங்கப்பட உள்ள தால் சிதம்பரத்தில் புதிய சாலைகள் போட படா மலேயே உள்ளது. ஆகையால் உடனடியாக புதிய பாதாள சாக்கடை திட்டப் பணிகளை துவங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்னர். துவங்கபடுமா என சிதம்பரம் நகர பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.