Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி தனிக்குடிநீர் திட்டத்தில் 22 மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி

Print PDF

தினமலர் 04.10.2010

மாநகராட்சி தனிக்குடிநீர் திட்டத்தில் 22 மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி

சேலம்: சேலம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தனிக்குடிநீர் திட்டத்தின் கீழ் புதிதாக 22 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.சேலம் மாநகராட்சியில் 283 கோடியே ஒன்பது லட்சம் ரூபாய் செலவில் தனிக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு பேக்கேஜாக திட்டப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

முதல் பேக்கேஜ் பணி 168 கோடியே ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் மேட்டூர் தொட்டில்பட்டி முதல் மாநகராட்சி எல்லை வரை ஐந்து சிப்பங்களாக மேற்கொள்ள பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.இரண்டாவது பேக்கேஜில் சேலம் மாநகர எல்லைக்குள் 22 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டவும், குடிநீர் பிரதான மற்றும் பகிர்மான குழாய்கள் பதிக்கவும், ஏற்கனவே உள்ள குடிநீர் பகிர்மான குழாய்களை மாற்றி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு தண்ணீர் முதலீட்டு கழகத்தினரால் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. சிவதாபுரம், அரியாக்கவுண்டம்பட்டி, செவ்வாய்ப்பேட்டை லாரி மார்க்கெட், நெடுஞ்சாலை நகர், ஜாகீர் அம்மாப்பாளையம், மகேந்திரபுரி சின்னதிருப்பதி, சின்ன கொல்லப்பட்டி, சின்ன திருப்பதி, பெரிய புதூர், சொர்ணபுரி, அம்மாப்பேட்டை என்.ஜி.., காலனி, வித்யாநகர், வாய்க்கால்பட்டறை, சன்னியாசி குண்டு ஓந்தாப்பிள்ளை காடு, தாதகாப்பட்டி, பஞ்சதாங்கி ஏரி, எருமாப்பாளையம் மெயின்ரோடு, களரம்பட்டி மெயின்ரோடு, செல்லக்குட்டி கரடு, ஜாரி கொண்டலாம்பட்டி, குமரகிரி அடிவாரம் ஆகிய இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.சேலம் மாநகராட்சி கூட்டத்தில் புதிய நீர்த்தேக்க தொட்டிகளை கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.