Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வந்தவாசியில் 22ம் தேதி திறக்கப்படும் புதிய பஸ் நிலைய அமைப்பு இறுதிகட்டப் பணிகள் தீவிரம்

Print PDF

தினகரன் 05.10.2010

வந்தவாசியில் 22ம் தேதி திறக்கப்படும் புதிய பஸ் நிலைய அமைப்பு இறுதிகட்டப் பணிகள் தீவிரம்

வந்தவாசி, அக்.5: வந்தவாசியில் புதிய பஸ் நிலையத்தை வரும் 22ம் தேதி தமிழக துணை முதல்வர் மு.. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதையடுத்து இறுதிகட்டப் பணிகளை அமைச்சர் எ..வேலு நேற்று ஆய்வு செய்தார்.

வந்தவாசி நகரில் ரூ4.50 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இதனை வருகிற 22ம் தேதி தமிழக துணை முதல்வர் மு..ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

இந்நிலையில் தமிழக உணவுத்துறை அமைச்சர் எ.. வேலு நேற்றுகாலை 8.45 மணியளவில் வந்தவாசி புதிய பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது பேருந்து நிற்கும் இடத்தில் மேற்கூரைக்கும், கட்டிடத்திற்கும் இடைவெளி அதிகளவில் உள்ளதால் மழை பெய்யும்போது பயணிகள் அவதிப்படுவார்கள். எனவே, முழுவதும் இடைவெளி தெரியாமல் கூரை அமைக்க வேண்டும் என நகராட்சி ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.

மேலும் பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள், தரை மற்றும் இருக்கைகள் தரமனதாக உள்ளதா? என அமைச்சர் ஆய்வு செய்தார். இதையடுத்து மீசநல்லூர் கிராமத்தில் ரூ2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமத்துவபுரத்தை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார்.

அவருடன், தி.மலை கலெக்டர் மு.ராஜேந்திரன், எம்எல்ஏ கமலக்கண்ணன், ஒன்றிய குழு தலைவர் கே.ஆர். சீதாபதி, எம்.எஸ். தரணிவேந்தன், முன்னாள் எம்பி துரை, முன்னாள் எம்எல்ஏ பாலஆனந்தன், நகராட்சி தலைவர் சீனிவாசன், ஆணையாளர் உசேன் பாரூக் மன்னர், பொறியாளர் மகாதேவன், நகர திமுக செயலாளர் லியாகத் பாஷா ஆகியோர் உடனிருந்தனர்.