Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உழவர்சந்தை வடிவில் சென்ட்ரல் மார்க்கெட்டில் 1090 புதிய கடைகள் தயார் மாநகராட்சியில் இன்று ஏலம்

Print PDF

தினகரன் 06.10.2010

உழவர்சந்தை வடிவில் சென்ட்ரல் மார்க்கெட்டில் 1090 புதிய கடைகள் தயார் மாநகராட்சியில் இன்று ஏலம்

மதுரை, அக். 6: மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில் ஆயிரத்து 90 கடைகள் உழவர் சந்தை வடிவில் தயாராகி உள்ளன. இந்த கடைகளுக்கு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று ஏலம் நடக்கிறது. மதுரை மாட்டுத்தாவணியில் நிறுவப்பட்டுள்ள சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் 524 கட்டிட கடைகள் வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டு செயல்படுகிறது. புதிதாக தரையில் கான்கிரீட் தளம், மேற்கூரையுடன் உழவர் சந்தை வடி வில் ஆயிரத்து 90 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகள் ஒவ்வொன்றுக்கும் டெபாசிட் ரூ. 50 ஆயிரம், மாத வாடகை ரூ.700 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து கடைகளும் இன்று (அக்.6) காலை 10.30 மணி முதல் மாநகராட்சி அலுவலகத்தில் பகிரங்க ஏலம் நடைபெறும் என ஆணையாளர் செபாஸ்டின் அறிவித்துள்ளார். மாநகராட்சி அலுவலகத்தில் 3 இடங்களில் ஏலம் நடக்கி றது. டெபாசிட் ரூ. 50 ஆயி ரம் ஆணையாளர் பெயரில் வங்கியில் டிடி எடுத்து, மாநகராட்சியில் முன்பதிவு செய்துள்ளவர்கள் மட்டும் ஏலத்தில் அனுமதிக்கப்படுவர். ஏலம் நடத்தும் அதிகாரியிடம் யாராவது பிரச்சினையில் ஈடுபட்டால் அவரது மனு தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலம் நடைபெறுவதை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. டெபாசிட் தொகை மூலம் ரூ. 5 கோடியே 45 லட்சம், வாடகையாக மாதம் ரூ. 8 லட்சம் என மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.