Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெரம்பூர் புதிய பாலத்தின் கீழ் இசை நீருற்றுடன் அழகிய பூங்கா; தமிழகத்திலே முதல் முதலாக நிறுவப்படுகிறது

Print PDF

மாலை மலர் 07.10.2010

பெரம்பூர் புதிய பாலத்தின் கீழ் இசை நீருற்றுடன் அழகிய பூங்கா; தமிழகத்திலே முதல் முதலாக நிறுவப்படுகிறது

பெரம்பூர் புதிய பாலத்தின் கீழ் இசை நீருற்றுடன்
 
 அழகிய பூங்கா;
 
 தமிழகத்திலே முதல்
 
 முதலாக நிறுவப்படுகிறது

சென்னை, அக். 7- பெரம்பூர் புதிய பாலத்தின் கீழ் இசை நீருற்றுடன் அழகிய பூங்கா அமைக்கப்படுகிறது. இதனை துணை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கிறார்.வடசென்னை மக்களின் 40 ஆண்டு கால கனவாக இருந்த பெரம்பூர் ரெயில்வே மேம்பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ரூ.450 கோடி செலவில் திறக்கப்பட்ட இந்த மேம்பாலத்தின் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைந்தது.

பெரம்பூர், அயனாவரம், கொளத்தூர், மூலக்கடை, செம்பியம், கொடுங்கையூர், மாதவரம் பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் பயன் அடைந்து வருகிறார்கள்.

இந்த பாலத்தின் இருபுறமும் 110 கிராவுண்ட் இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது. அதில் அழகிய பூங்கா அமைக்கப்படுகிறது. பெரம்பூர் பாலத்தின் கீழ் உள்ள பூங்கா சுற்றுலா பகுதியாக காட்சியளிக்கிறது. அந்த பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து கொண்டு விசாலமான இந்த பூங்காவிற்கு வந்து பொழுது போக்குகிறார்கள்.

மாலைநேரம் ஆகி விட்டலே அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக வருகிறது. இரவு 9மணி வரை சிறுவர்கள் விளையாடி மகிழ்கிறார்கள். உயர் கோபுர மின் விளக்கு போடப்பட்டு இருப்பதால் அந்த பகுதியில் மக்கள் கூட்டம் நிரம்பி திருவிழா போல காட்சியளிக்கிறது.

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் இங்கு கூடுவதால் சிறுவர்களுக்கான சிறுசிறு கடைகள் நிறைய தோன்றுகின்றன.

குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள், திண்பண்டங்கள் போன்றவற்றிக்காக திடீர் கடைகள் உருவாகிறது.

சென்னையில் புதிய சுற்றுலா மையமாக இந்த பூங்கா திகழ்ந்து வருகிறது. பூங்கா அமைக்கும் பணி ஒரு புறம் நடந்து வரும் வேளையில் மக்கள் கூட்டம் கூட்டமாக இங்கு திரண்டு வருகிறார்கள். அதனால் பூங்கா பணியை விரைந்து முடிக்க மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது.

தமிழகத்தில் முதல் முதலாக புதிய தொழில் நுணுக்கத்துடன் இசையுடன் நீருற்று அமைக்கப்படுகிறது.

காதுக்கேற்ற இசை முழங்க அதற்கேற்ப நீர் விழ்ச்சி அசைந்தாடும் வகையில் உருவாக்கப்படுகிறது. பசுமையான புல்வேலி, குழந்தைகள் விளையாட்டு பூங்கா, யோகாமேடை, "வாக்கிங் செல்வதற்கு தனிபாதை, அலங்கார விளக்குகள் என ஒரு கோடியே 64 லட்சம் செலவில் அமைக்கப்படுகிறது. குழந்தைகளை மகிழ்விக்க கூடிய விளையாட்டு சாதனங்கள் இடம் பெறுகின்றன.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழ் நாட்டிலேயே இசை நீருற்று பெரம்பூர் பூங்காவில் முதல் முதலில் அமைக்கப்படுகிறது. நடைபாதை, பசுமை தரைகள், யோகா மேடை, அலங்கார விளக்குகள் போன்றவை அமைக்கப்படுகிறது. பூங்கா அமைக்கும் பணி நிறைவடைய உள்ளது.

இன்னும் 10 நாளில் துணை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் வண்ணமிகு பூங்காவை திறந்து வைக்க உள்ளார். இந்த பூங்கா அந்த பகுதி மக்களுக்கு பொழுதுபோக்கு மையமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.