Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புழுதிவாக்கத்தில் ரூ.15 லட்சத்தில் "ஐமாஸ்' விளக்குகள்

Print PDF

தினமலர் 08.10.2010

புழுதிவாக்கத்தில் ரூ.15 லட்சத்தில் "ஐமாஸ்' விளக்குகள்

புழுதிவாக்கம் : உள்ளகரம் - புழுதிவாக்கம் நகராட்சி சார்பில் 15 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட மூன்று "ஐமாஸ்' விளக்குகள் இயக்கி வைக்கப்பட்டன.உள்ளகரம் - புழுதிவாக்கம் நகராட்சி சார்பில் ஏற்கனவே 25 லட்சம் ரூபாய் செலவில் புழுதிவாக்கம் ஆறாவது பிரதான சாலை, சாமி நகர் சந்திப்பு, பொன்னியம்மன் கோவில் - புழுதிவாக்கம் சந்திப்பு, மந்தவெளி தெரு, புழுதிவாக்கம் மயானம் ஆகிய இடங்களில், "ஐமாஸ்' விளக்குகள் அமைக்கப்பட்டன.இதற்கிடையே, பாலாஜி நகர் - பெருமாள் நகர் சந்திப்பு, அண்ணா சாலை - மதியழகன் தெரு சந்திப்பு, காமராஜ் சாலை - குபேர முனுசாமி தெரு சந்திப்பு ஆகிய இடங்களில் 15 லட்சம் ரூபாய் செலவில் மேலும் மூன்று, "ஐமாஸ்' விளக்குகள் அமைக்கப்பட்டன.உள்ளகரம் - புழுதிவாக்கம் நகராட்சித் தலைவர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடந்த புதிய, "ஐமாஸ்' விளக்கு திறப்பு விழாவில், துணைத் தலைவர் மணிகண்டன் முன்னிலையில், தென்சென்னை எம்.பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன், "ஐமாஸ்' விளக்குகளை இயக்கி வைத்தார்.விழாவில் அவர் பேசும் போது, "தென்சென்னை தொகுதியில் பொதுமக்களின் எந்த பிரச்னையாக இருந்தாலும் என்னிடம் தெரிவிக்கலாம். புழுதிவாக்கம் பாலாஜி பிரதான சாலை - முருகப்பா தெரு சந்திப்பு, சதாசிவம் நகர் இரண்டாவது இணைப்பு சாலை - ராமலிங்கம் நகர் சந்திப்பில் இரண்டு, "ஐமாஸ்' விளக்குகள் விரைவில் அமைக்கப்படும்' என்றார்.