Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வால்பாறை நகராட்சியில் அரசு கட்டடங்கள் திறப்பு

Print PDF

தினமணி 08.10.2010

வால்பாறை நகராட்சியில் அரசு கட்டடங்கள் திறப்பு

வால்பாறை,​​ அக்.7: வால்பாறை நகராட்சி அலுவலக புதிய கட்டட திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார்.

அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மூலம் ரூ. ஒரு கோடியே 20 லட்சம் மதீப்பீட்டில் ​ நகராட்சி அலுவலக கட்டடம்,​​ பூங்கா மற்றும் ஆய்வு மாளிகை கட்டப்பட்டன.​ புதிய கட்டடங்களை ஊரக தொழில் மற்றும் கால்நடை பராமரிப்புத் றை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி,​​ திறந்து வைத்தார்.​ பின்னர்,​​ வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சித் தலைவர் கணேசன் வரவேற்றுப் பேசினார்.

எம்.எல்.ஏ கோவை தங்கம் சிறப்புரையாற்றினார்.​ தையல் இயந்திரம்,​​ சமையல் அடுப்பு,​​ திருமண உதவித்தொகை,​​ விதவை உதவித்தொகை,​​ மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை என அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை 1200 பயனாளிகளுக்கு அமைச்சர் வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ சிங்காரவேலு,​​ நகராட்சி துணைத் தலைவர் ராஜதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.​ நகராட்சி செயல் அலுவலர் ராஜகுமாரன் நன்றி கூறினார்.