Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தயாநிதி மாறன் தொகுதி நிதியில் கட்டப்படும் லோகோ ஒர்க்ஸ் மேம்பாலம் அடுத்த மாதம் திறப்பு

Print PDF

தினகரன் 12.10.2010

தயாநிதி மாறன் தொகுதி நிதியில் கட்டப்படும் லோகோ ஒர்க்ஸ் மேம்பாலம் அடுத்த மாதம் திறப்பு

அண்ணா நகர், அக்.12: தயாநிதி மாறன் தொகுதி நிதியில் கட்டப்பட்டு வரும் லோகோ ஒர்க்ஸ் மேம்பாலம் அடுத்த மாதம் திறக்கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் ரயில்வே மேம்பாலத்தை ஒட்டி கூடுதல் மேம்பாலம் ரூ8.41 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்படுகிறது. இதன் சர்வீஸ் ரோடு உள்பட இதர பணிகளுக்கும் சேர்த்து மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும், ஜவுளித்துறை அமைச்சருமான தயாநிதி மாறன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ9.25

கோடி வழங்கியுள்ளார். இந்த பாலம் வடசென்னை மக்கள் சென்னை நகருக்குள் எளிதாக வந்து செல்ல மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதுதவிர வில்லிவாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ரூ34.16

கோடியில் சுரங்கப்பாதை கட்டப்பட்டு வருகிறது. இரண்டு பணிகளையும் மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

லோகோ ஒர்க்ஸ் ரயில்வே மேம்பால பணிக்காக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன், தொகுதி நிதியில் இருந்து ரூ9.25 கோடியை அளித்துள்ளார். தொகுதி மேம்பாட்டு நிதியில் அதிக தொகை ஒதுக்கியிருப்பது இந்தியாவிலேயே இது முதல் முறை.

லோகோ ஒர்க்ஸ் ரயில்வே மேம்பாலம் நவம்பர் இறுதியில் கட்டி முடிக்கப்படும். வில்லிவாக்கம் ரயில்வே சுரங்கப்பாதை வரும் டிசம்பரில் கட்டி முடிக்கப்படும். இந்த இரண்டு பணிகளும் முடிவடைந்ததும். அவற்றை முதல்வர் திறந்து வைப்பார்.

இவ்வாறு மேயர் கூறினார்.

வி.எஸ்.பாபு எம்.எல்., 4வது மண்டல குழு தலைவர் சீனிவாசன் உடனிருந்தனர். மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டு வரும் பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் மேம்பால பணியை மேயர் மா.சுப்பிரமணியன் பார்வையிடுகிறார். அருகில், வி.எஸ்.பாபு எம்.எல்., மண்டல குழு தலைவர் சீனிவாசன்.