Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் ரயில்வே கூடுதல் மேம்பாலம் நவம்பரில் முதல்வர் திறக்கிறார்

Print PDF

தினமணி 12.10.2010

பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் ரயில்வே கூடுதல் மேம்பாலம் நவம்பரில் முதல்வர் திறக்கிறார்

பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் அருகில் ரூ..9.25 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை திங்கள்கிழமை ஆய்வு செய்தார் மேயர் மா.சுப்பிரமணியன்.

சென்னை, அக்.11: பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் ரயில்வே கூடுதல் மேம்பாலத்தை நவம்பர் மாதம் முதல்வர் கருணாநிதி திறந்து வைக்க உள்ளார் என்று மேயர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன், பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் கூடுதல் மேம்பாலப்பணி மற்றும் வில்லிவாக்கம் சுரங்கப்பாதைப் பணிகளை ரயில்வே துறை அதிகாரிகளுடன் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியது:

பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் ரயில்வே மேம்பாலத்தை ஒட்டி கூடுதலாக மேம்பாலம் கட்டும் பணி ரூ. 9.25 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.

இந்தப் பாலம் அயனாவரம் மற்றும் கொளத்தூர் பகுதிகளை இணைக்கும் மிக முக்கியமான பாலமாகும். இப்பாலப்பணி நவம்பரில் முடிக்கப்பட்டு, முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்படும். துணை முதல்வர் மு.. ஸ்டாலின் முன்னிலையில் இந்தப் பாலத் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

வில்லிவாக்கம் சுரங்கப்பாதை பணி:

வில்லிவாக்கம் சுரங்கப்பாதை பணி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, நில ஆர்ஜிதம் செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ரூ. 34.16 கோடியில் கட்டப்படும் இச்சுரங்கப்பாதையில் மாநகராட்சியின் பணிகள் 85 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளன.

ரயில்வே துறை சார்பில் 5 பெட்டக வடிவிலான அமைப்புகள் அமைக்கும் பணியில் 3 முடிக்கப்பட்டுள்ளன. இந்தச் சுரங்கப்பாதையின் பணிகள் வரும் டிசம்பரில் முடிக்கப்பட்டு, தமிழக முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்படும் என்றார் மா. சுப்பிரமணியன்.