Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரோட்டை கடந்து செல்ல சென்னையில் 7 இடங்களில் நகரும் படிக்கட்டு வசதி தமிழக அரசு முடிவு

Print PDF

மாலை மலர் 13.10.2010

ரோட்டை கடந்து செல்ல சென்னையில் 7 இடங்களில் நகரும் படிக்கட்டு வசதி தமிழக அரசு முடிவு

ரோட்டை கடந்து செல்ல
 
 சென்னையில் 7 இடங்களில்
 
 நகரும் படிக்கட்டு வசதி
 
 தமிழக அரசு முடிவு

சென்னை, அக். 13- சென்னை நகரின் போக்குவரத்து நெரி சலை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

முக்கிய இடங்களில் மேம்பாலம், சுரங்கப்பாதை, பொது மக்கள் சாலையை கடக்க நடைபாலம், ரோட்டு ஓரமாக நடந்து செல்ல நடைபாதை ஆகியவை அமைக்கப்படுகின்றன.

தற்போது பொதுமக்கள் வசதிக்காக சென்னை நகரில் 7 இடங்களில் சாலையை கடக்கும் நடைபாலம் அமைத்து, நகரும் படிக்கட்டு (எஸ்கலேட்டர்) வசதியும் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் இதற்கான பரிந்துரையை செய்து இருக்கிறது.

அதன்படி, வேளச்சேரி பைபாஸ் ரோட்டில் உள்ள குடிநீர் நிரம்பும் நிலையம் அருகில், அண்ணா நகர் மேற்கு பணிமனை சந்திப்பு, அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி அருகில், தாம்பரம் அரசு ஆஸ்பத்திரி அருகில், குரோம்பேட்டை, பெருங் குடி அருகே உள்ள தரமணி இணைப்பு சாலை, டி.சி.எஸ். சந்திப்பு ஆகிய 7 இடங்களில் நகரும் படிக்கட்டு வசதியுடன் நடை மேம்பாலம் அமைக்கப்படுகிறது.

நெடுஞ்சாலைத் துறை யினர், போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக் கள் சாலையை கடக்க சிரமப்படும் இடங்கள் ஆகிய வற்றை ஆய்வு செய்து, இந்த இடங்களை முடிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு நகர வளர்ச்சி மேம்பாட்டு திட்டம்-3ன் மூலம் இந்த திட்டம் நிறை வேற்றப்படுகிறது. அரசு ஒப்புதல் பெற்று வருகிற மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் இதற்கான பணி தொடங்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.