Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திண்டிவனம் நகராட்சிக்கு ரூ 25 லட்சம் மதிப்பில் வேன், குப்பை தொட்டிகள் துப்புரவு அலுவலர்களிடம் ஒப்படைப்பு

Print PDF
தினகரன் 18.10.2010

திண்டிவனம் நகராட்சிக்கு ரூ 25 லட்சம் மதிப்பில் வேன், குப்பை தொட்டிகள் துப்புரவு அலுவலர்களிடம் ஒப்படைப்பு

திண்டிவனம், அக். 18: திண்டிவனம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. வார்டில் உள்ள குப்பைகளை ஒரே இடத்தில் போட ஏதுவாக நகராட்சி சார்பில் வார்டுக்கு ஒரு குப்பைத் தொட்டி வீதம் 33 தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இவைகளை லாரிகள் மூலம் சலவாதி சாலையில் உள்ள உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு மக்கும் மற்றும் மக்காத குப்பை என இரண்டாக பிரிக்கப்படுகிறது. இதில் மக்கும் குப்பையில் இருந்து சுமார் 40 நாட்களில் உரம் தயாரிக்கின்றனர். இந்த குப்பைகளை பிரிக்க ஆட்கள் கூடுதலாக தேவைப்படுகின்றனர். மேலும் நேரமும் வீணாகிறது.

இதனால் ஒவ்வொரு வார்டிலும் கூடுதலாக ஒரு குப்பைத் தொட்டி வைக்க முடிவு செய்யப்பட்டது. மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என வைத்துவிட்டால் மக்கள் அதில் பிரித்து போட்டு விடுவர். இதனால் பிரிக்க ஏதுவாக இருக்கும்.

இதையொட்டி திடக்கழிவு மேலாண்மை 2008&2009 திட்டத்தின் கீழ் ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கூடுதலாக ஒரு வேன், 25 டம்பர் பிளேசர் குப்பை தொட்டிகள் வாங்கப்பட்டு திண்டிவனம் நகராட்சிக்கு கொண்டு வரப்பட்டது.

இதையொட்டி புதிதாக வாங்கப்பட்ட வேன், 25 டம்பர் பிளேசர் குப்பை தொட்டிகளை துப்பரவு அலுவலர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. திண்டிவனம் நகர மன்ற தலைவர் பூபாலன் தலைமை வகித்து, புதிய வேனுக்கான சாவியை துப்புரவு அலுவலர் பாலசந்திரனிடம் ஒப்படைத்தார். மேலும் அந்தந்த வார்டுகளுக்கான டம்பர் பிளேசர் குப்பை தொட்டிகளையும் வழங்கினார்.

இதில் துப்புரவு ஆய்வாளர் ராஜரத்தினம், நகர மன்ற உறுப்பினர்கள் முரளிதாஸ், முருகன், ஜெயராஜ், ஜெயக்குமார், மற்றும் மேற்பார்வையாளர்கள், வாகன ஓட்டுநர்கள் கலந்து கொண்ட னர். திண்டிவனம் நகராட்சி சார்பில் ரூ25 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட புதிய வேன் மற்றும் குப்பைத் தொட்டிகளை நகர் மன்ற தலைவர் பூபாலன் துப்புரவு அலுவலர் பாலசந்திரனிடம் ஒப்படைத்தார்.

Last Updated on Monday, 18 October 2010 10:42