Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கெங்கு ரெட்டி சாலை சுரங்கப்பாதை: புதுப்பிக்கும் பணி ஜனவரியில் நிறைவு

Print PDF

தினமலர் 19.10.2010

கெங்கு ரெட்டி சாலை சுரங்கப்பாதை: புதுப்பிக்கும் பணி ஜனவரியில் நிறைவு

சென்னை : சேத்துப்பட்டு கெங்கு ரெட்டி சாலை சுரங்கப்பாதை 21 லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் உள்ள பழைய சுரங்கப் பாதைகள் மற்றும் மேம்பாலங்களை புதுப்பிக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. அரங்கநாதன் சுரங்கப்பாதை, காந்தி இர்வின் சாலை பாலம், நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை, தங்கசாலை பார்த்தசாரதி பாலம், பின்னி பாலம், கண்ணகி சிலை அருகில் உள்ள சுரங்கப்பாதை, எல்.பி., சாலையில் கால்வாய் குறுக்கே உள்ள பாலம் ஆகிய ஏழு சுரங்கப்பாதைகள், மேம்பாலங்கள் இரண்டு கோடியே 28 லட்ச ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டது. அதுபோல் வைத்தியநாதன் மேம்பாலம், சென்ட்ரல் எதிரில் ஸ்டேன்லி மேம்பாலம்.

திரு.வி.., பாலம் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை, தண்டையார்பேட்டை, தொற்று நோய் தடுப்பு மருத்துவமனை அருகில் சுரங்கப் பாதைகள் போன்று பல சுரங்கப் பாதைகள், மேம்பாலங்கள் மூன்று கோடியே 65 லட்ச ரூபாய் செலவில் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கெங்கு ரெட்டி சாலை சுரங்கப்பாதை 21 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சீரமைக்க ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பணியை மேயர் சுப்ரமணியன் நேற்று காலை தொடங்கி வைத்தார். "ஜனவரி மாதத்திற்குள் கெங்கு ரெட்டி சாலை சுரங்கப்பாதை புதுப்பிக்கும் பணி முடிக்கப்படும். சுரங்கப் பாதையில் பக்கவாட்டு சுவர்களில் தமிழர் பண்பாட்டை விளக்கும் ஓவியங்கள் வரையப்படும்' என்று மேயர் சுப்ரமணியன் கூறினார். மேயருடன் கவுன்சிலர்கள், அதிகாரிகள், உடனிருந்தனர்.